பாடம் : 15
உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகி விட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட (தீய) வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்து விட்டான் (எனும் 4:88ஆவது வசனத் தொடர்).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அர்கஸ எனும் சொல்லுக்குப் பிரித்துத் தனித் தனியாக அவர்களின் கூட்டமைப்பைச் சிதற அடித்து விட்டான் என்று பொருள். ஃபிஅத் எனும் சொல்லுக்குக் குழுவினர் என்று பொருள்.
ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள், 4:88 வது இறைவசனம் குறித்துக் கூறினார்:
(உஹுதுப் போருக்காக) நபி (ஸல்) அவர்களுடன் (சென்று) இருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) உஹுதிலிருந்து (வழியிலேயே) திரும்பி வந்து விட்டார்கள். இவர்களின் விஷயத்தில் (என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு கொண்டு ) மக்கள் இரு பிரிவினராக ஆகிவிட்டனர்.
ஒரு பிரிவினர், “(நயவஞ்சகர்களாகிய) அவர்களைக் கொன்று விடுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். மற்றொரு பிரிவினர் “(வெளிப்படையில் முஸ்லிம்களாகிய) அவர்களை கொல்ல வேண்டாம்” என்று கூறினர். அப்போது தான் , உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வேறு கருத்துகள் கொண்ட) குழுவினராய் ஆகிவிட்டீர்களே! அல்லாஹ்வோ அவர்களை, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(தீய)வற்றின் காரணத்தால் தலைகுனியச் செய்துவிட்டான்‘ எனும் (திருக்குர்ஆன் 04:88 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது.
மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்கிவிடுவதைப்போல் அது தீமையை அகற்றிவிடும்’ என்று கூறினார்கள்.
அமைதியளிக்கக்கூடிய அல்லது அச்சம் தரக்கூடிய ஏதேனும் செய்தி அவர்களிடம் வந்தால் அதனை அவர்கள் பரப்பிவிடுகிறார்கள். ஆனால், அதனைத் தூதரிடமும் அவர்களில் பொறுப்புள்ளவர்களிடமும் தெரிவித்திருப்பார்களேயானால், நுணுகி ஆராயும் திறனுடையவர்கள் அ(ச்செய்தியின் உண்மை நிலை)தனை நன்கு அறிந்திருப்பார்கள் (எனும் 4:82 வது வசனத் தொடர்).
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அஃதாஊ‘ எனும் சொல்லுக்குப் ‘பரப்பிவிடுவார்கள்’ என்று பொருள். ‘யஸ்தன்பித்தூன்‘ எனும் சொல்லுக்கு ‘ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள்’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 4:86 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹசீப்‘ எனும் சொல்லுக்குப் ‘போதுமானவன்’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 4: 117 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஸ்‘ எனும் சொல் கல், மண் போன்ற உயிரற்ற பொருட்களைக் குறிக்கும். ‘மரீத்‘ எனும் சொல்லுக்கு ‘(தீமையில்) பிடிவாதமாக இருப்பவன்’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 4:119 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபல்யுபத்திகுன்ன‘ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் (தம் கால்நடைகளின் காதுகளைக்) கிழித்துத் துண்டிப்பார்கள்’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 4:122 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கீல்‘ எனும் பதமும் ‘கவ்ல்‘ எனும் பதமும் (பேச்சு, சொல் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(திருக்குர்ஆன் 4:155 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘தபஅ‘ எனும் சொல்லின் செயப்பாட்டு வினைச்சொல்லான) ‘துபிஅ‘ எனும் சொல்லுக்கு ‘முத்திரையிடப்பட்டது’ என்று பொருள்.
Book : 65
بَابُ {فَمَا لَكُمْ فِي المُنَافِقِينَ فِئَتَيْنِ وَاللَّهُ أَرْكَسَهُمْ بِمَا كَسَبُوا} [النساء: 88]
قَالَ ابْنُ عَبَّاسٍ: ” بَدَّدَهُمْ. فِئَةٌ: جَمَاعَةٌ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، وَعَبْدُ الرَّحْمَنِ، قَالاَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
{فَمَا لَكُمْ فِي المُنَافِقِينَ فِئَتَيْنِ} [النساء: 88] رَجَعَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أُحُدٍ، وَكَانَ النَّاسُ فِيهِمْ فِرْقَتَيْنِ: فَرِيقٌ يَقُولُ: اقْتُلْهُمْ، وَفَرِيقٌ يَقُولُ: لاَ، فَنَزَلَتْ: {فَمَا لَكُمْ فِي المُنَافِقِينَ فِئَتَيْنِ} [النساء: 88] وَقَالَ: «إِنَّهَا طَيْبَةُ تَنْفِي الخَبَثَ كَمَا تَنْفِي النَّارُ خَبَثَ الفِضَّةِ»
{ أَذَاعُوا بِهِ } : أَفْشَوْهُ ، { يَسْتَنْبِطُونَهُ } : يَسْتَخْرِجُونَهُ ، { حَسِيبًا } : كَافِيًا ، { إِلا إِنَاثًا } يَعْنِي : الْمَوَاتَ حَجَرًا أَوْ مَدَرًا وَمَا أَشْبَهَهُ ، { مَرِيدًا } : مُتَمَرِّدًا ، { فَلَيُبَتِّكُنَّ } : بَتَّكَهُ قَطَّعَهُ ، { قِيلا } وَقَوْلًا وَاحِدٌ ، { طَبَعَ } : خَتَمَ
சமீப விமர்சனங்கள்