பாடம் : 24
மனித உள்ளங்கள் உலோபித்தனத்திற்கு(ம் குறுகிய எண்ணத்திற்கும் விரைவாக) உட்பட்டுவிடுகின்றன (எனும் 4:128ஆவது வசனத் தொடர்).
(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அஷ்ஷுஹ்ஹு எனும் சொல், மனிதன் ஒன்றின் மீது பேராசை கொண்டு அதிகமாக விரும்புவதைக் குறிக்கும். (4:129ஆவது வசனத்திலுள்ள) கல்மு அல்லகா (அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவள் போல) எனும் சொல், அவள் விதவையாகவும் இல்லாமல் கணவன் உடைய வளாகவும் இல்லாமல் இருக்கும் (தொங்கு) நிலையைக் குறிக்கும். (4:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நுஷுஸ் (நல்ல விதமாக நடந்து கொள்ளாமை) எனும் சொல்லுக்குச் சினம்கொள்ளல் என்று பொருள்.
ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அறிவித்தார்.
ஆயிஷா (ரலி), ‘ஒரு பெண் தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்துகொள்ள மாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் – மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில் தவறேதுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 04:128 வது) வசனம் குறித்துக் கூறுகையில், ‘தம்மிடம் இருந்துவரும் மனைவியுடன் முறையாக இல்லறம் நடத்த விரும்பாத ஓர் ஆண் அவளைப் பிரிந்துவிட விரும்புகிறான். (இந்நிலையில் கணவனிடம்) அவள் ‘என்னுடைய (செலவுத் தொகை உள்ளிட்ட) உரிமையை உனக்கு நான் விட்டுக்கொடுத்து விடுகிறேன்; (என்னை விவாகாரத்துச் செய்து விடாமல் தொடர்ந்து மனைவியாகவே இருக்க அனுமதிக்கவேண்டும்)’ என்று கோருகிறாள். இது தொடர்பாகவே இவ்வசனம் (திருக்குர்ஆன் 04:128) இறங்கிற்று’ என்று குறிப்பிட்டார்கள்.
Book : 65
(புகாரி: 4601)بَابُ {وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} [النساء: 128]
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {شِقَاقٌ} [البقرة: 137]: «تَفَاسُدٌ»، {وَأُحْضِرَتِ الأَنْفُسُ الشُّحَّ} [النساء: 128]: «هَوَاهُ فِي الشَّيْءِ يَحْرِصُ عَلَيْهِ»، {كَالْمُعَلَّقَةِ} [النساء: 129]: «لاَ هِيَ أَيِّمٌ، وَلاَ ذَاتُ زَوْجٍ». {نُشُوزًا} [النساء: 128]: «بُغْضًا»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
{وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا} [النساء: 128] قَالَتْ: ” الرَّجُلُ تَكُونُ عِنْدَهُ المَرْأَةُ لَيْسَ بِمُسْتَكْثِرٍ مِنْهَا، يُرِيدُ أَنْ يُفَارِقَهَا، فَتَقُولُ: أَجْعَلُكَ مِنْ شَأْنِي فِي حِلٍّ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ فِي ذَلِكَ
Bukhari-Tamil-4601.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4601.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்