தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4610

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 எவர் அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் போரிடுகின்றார்களோ, மேலும் பூமியில் கலகம் விளைவிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இது தான் : அவர்கள் கொல்லப் படவேண்டும்; அல்லது தூக்கில் ஏற்றப்பட வேண்டும்; அல்லது அவர்களின் மாறுகை,மாறுகால்கள் வெட்டப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டும் (எனும் 5:33ஆவது வசனத் தொடர்). (இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) அல்லாஹ்வுடன் போரிடுதல் என்பதற்கு, அவனை மறுத்தல் என்பது கருத்தாகும்.

 அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

நான் (உமய்யா கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்களுக்கப் பின்னால் அமர்ந்திருந்தேன். (அறியாமைக் காலத்து ‘அல்கஸாமா’ எனும் சத்தியமுறை பற்றி அன்னார் கேட்க, அதுபற்றி), மக்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதில் பழிவாங்கல் இருப்பது உண்மைதான். உங்களுக்கு முன்பிருந்த) கலீஃபாக்கள் இதன்படி பழிவாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் கூறினார்கள்.

உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) தம் முதுகுக்குப் பின்னால் அமர்ந்திருந்த என் பக்கம் திரும்பி, ‘அப்துல்லாஹ் இப்னு ஸைத் அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ அல்லது அபூ கிலாபாவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று கோட்டார்கள். நான், ‘திருமணமான பின்பு விபசாரம் புரிந்த மனிதனையும், அல்லது உயிருக்கு பதிலாக அன்றி (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றவனையும், அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களையும் எதிர்த்துப் போரிட்டவனையும் தவிர, வேறு எந்த மனிதரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை’ என்று சொன்னேன். அப்போது அன்பஸா இப்னு ஸயீத்(ரஹ்), ‘என்னிடம் அனஸ் இப்னு மாலிக்(ரலி) (‘அல்கஸாமா’ மற்றம் ‘உரைனா’ சம்பவம் குறித்து) இப்படி இப்படியெல்லாம் அறிவித்தார்கள்’ என்று கூறினார்கள்.

நான் சொன்னேன்:

‘அனஸ்(ரலி) என்னிடம் கூட (இப்படிச்) கூறினார்கள்: நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சமுதாயத்தார் (‘உக்ல்’ மற்றம் ‘உரைனா’ குலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்து உரையாடினார்கள். அப்போது அவர்கள், ‘இந்த பூமி (மதீனா) எங்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை (நாங்கள் நோய்வாய்ப்பட்டு விட்டோம்)’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘இதோ, எங்களின் (தர்மத்திற்குரிய) இந்த ஒட்டகங்கள் (மேய்ச்சலுக்காக நகருக்கு) வெளியே செல்லவிருக்கின்றன. நீங்களும் இவற்றுடன் சென்று இவற்றின் பாலையும் இவற்றின் சிறுநீரையும் அருந்துங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் அவற்றுடன் வெளியே சென்று அவற்றின் சிறுநீரையும் அவற்றின் பாலையும் அருந்தி (நோய்நீங்கி) குணமடைந்தனர். பின்னர், ஒட்டகம் மேய்ப்பவரின் மீது பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டார்கள்; ஒட்டகங்களை ஓட்டியும் சென்றார்கள்.

ஓர் உயிரை (அநியாயமாகக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனம் போர்புரிந்து, அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்டமுடியுமா, என்ன?

அப்போது அன்பஸா(ரஹ்), (வியப்புத் தெரிவிப்பது போன்று) ‘சுப்ஹானல்லாஹ்- அல்லாஹ் தூயவன்’ என்று கூறினார்கள்.

நான், ‘என்னை நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘(இல்லை) இதை எங்களுக்கு அனஸ்(ரலி) அறிவித்தார்’ என்று கூறிவிட்டு, ‘இந்த ஊர் (ஷாம்)வாசிகளே! இவரையும் இவரைப் போன்றவர்களையும் அல்லாஹ் உங்களிடையே வாழவைத்திருக்கும் வரை நீங்கள் நன்மையிலேயே நீடிப்பீர்கள்’ என்று கூறினார்கள்.

Book : 65

(புகாரி: 4610)

بَابُ {إِنَّمَا جَزَاءُ الَّذِينَ [ص:52] يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الأَرْضِ فَسَادًا، أَنْ يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا} [المائدة: 33] إِلَى قَوْلِهِ {أَوْ يُنْفَوْا مِنَ الأَرْضِ} [المائدة: 33]

المُحَارَبَةُ لِلَّهِ الكُفْرُ بِهِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنِي سَلْمَانُ أَبُو رَجَاءٍ، مَوْلَى أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي قِلاَبَةَ

أَنَّهُ كَانَ جَالِسًا خَلْفَ عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ فَذَكَرُوا وَذَكَرُوا، فَقَالُوا وَقَالُوا، قَدْ أَقَادَتْ بِهَا الخُلَفَاءُ، فَالْتَفَتَ إِلَى أَبِي قِلاَبَةَ وَهْوَ خَلْفَ ظَهْرِهِ، فَقَالَ: مَا تَقُولُ يَا عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ؟ – أَوْ قَالَ: مَا تَقُولُ يَا أَبَا قِلاَبَةَ؟ – قُلْتُ: مَا عَلِمْتُ نَفْسًا حَلَّ قَتْلُهَا فِي الإِسْلاَمِ، إِلَّا رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانٍ، أَوْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ، أَوْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ عَنْبَسَةُ: حَدَّثَنَا أَنَسٌ، بِكَذَا وَكَذَا، قُلْتُ: إِيَّايَ حَدَّثَ أَنَسٌ، قَالَ: قَدِمَ قَوْمٌ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَلَّمُوهُ، فَقَالُوا: قَدْ اسْتَوْخَمْنَا هَذِهِ الأَرْضَ، فَقَالَ: «هَذِهِ نَعَمٌ لَنَا تَخْرُجُ، فَاخْرُجُوا فِيهَا فَاشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا»، فَخَرَجُوا فِيهَا فَشَرِبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، وَاسْتَصَحُّوا وَمَالُوا عَلَى الرَّاعِي فَقَتَلُوهُ، وَاطَّرَدُوا النَّعَمَ، فَمَا يُسْتَبْطَأُ مِنْ هَؤُلاَءِ؟ قَتَلُوا النَّفْسَ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ، وَخَوَّفُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: سُبْحَانَ اللَّهِ، فَقُلْتُ: تَتَّهِمُنِي؟ قَالَ: حَدَّثَنَا بِهَذَا أَنَسٌ، قَالَ: وَقَالَ: «يَا أَهْلَ كَذَا، إِنَّكُمْ لَنْ تَزَالُوا بِخَيْرٍ مَا أُبْقِيَ هَذَا فِيكُمْ أَوْ مِثْلُ هَذَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.