பாடம் : 10 இறை நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும் எனும் (5:90ஆவது) வசனத் தொடர். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) அல்அஸ்லாம் என்பது (அறியாமைக் கால மக்கள்) தங்கள் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்தி வந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 நுஸுப் என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: அல்அஸ்லாம் என்பதன் ஒருமையான அஸ்ஸலம் என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். இஸ்திக்ஸாம் (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப்போட்டு, வேண்டாம் எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், செய் எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (செய்யலாம், செய்ய வேண்டாம்; செய்தால் நல்லது, செய்யா விட்டால் கேடு நேரிடும்என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறி பார்த்து வந்தார்கள். இதிலிருந்து ஃபஅல்(த்)து எனும் வாய்பாட்டில் கஸம்து எனும் கடந்த கால வினையும் குஸூம் எனும் வேர்ச் சொல்லும் வரும்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
மது பானத்தைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப்பட்டபோது ஐந்து வகையான மதுபானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.
Book : 65
(புகாரி: 4616)بَابُ قَوْلِهِ: {إِنَّمَا الخَمْرُ وَالمَيْسِرُ وَالأَنْصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ} [المائدة: 90]
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” الأَزْلاَمُ: القِدَاحُ يَقْتَسِمُونَ بِهَا فِي الأُمُورِ، وَالنُّصُبُ: أَنْصَابٌ يَذْبَحُونَ عَلَيْهَا ” وَقَالَ غَيْرُهُ: ” الزَّلَمُ: القِدْحُ لاَ رِيشَ لَهُ وَهُوَ وَاحِدُ، الأَزْلاَمِ وَالِاسْتِقْسَامُ: أَنْ يُجِيلَ القِدَاحَ فَإِنْ نَهَتْهُ انْتَهَى وَإِنْ أَمَرَتْهُ فَعَلَ مَا تَأْمُرُهُ بِهِ، يُجِيلُ: يُدِيرُ، وَقَدْ أَعْلَمُوا القِدَاحَ أَعْلاَمًا، بِضُرُوبٍ يَسْتَقْسِمُونَ بِهَا، وَفَعَلْتُ مِنْهُ قَسَمْتُ، وَالقُسُومُ: المَصْدَرُ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«نَزَلَ تَحْرِيمُ الخَمْرِ، وَإِنَّ فِي المَدِينَةِ يَوْمَئِذٍ لَخَمْسَةَ أَشْرِبَةٍ مَا فِيهَا شَرَابُ العِنَبِ»
சமீப விமர்சனங்கள்