பாடம் : 11 இறை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட் கொண்டிருந்தால் அவர்கள் மீது (அது) குற்றமாகாது. (ஆனால்,இனி தடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து) அவர்கள் விலகியிருக்க வேண்டும். மேலும், இறை நம்பிக்கையில் உறுதியாக நிலைத்திருப்ப வர்களாகவும், நற்செயல்கள் புரிகின்றவர் களாகவும், இன்னும் (எந்த எந்தப் பொருள் களைவிட்டுத் தடுக்கப்படுகின்றனரோ அவற்றிலிருந்து) விலகியிருப்பவர்களாகவும்,மேலும் இறைக் கட்டளைகளை ஏற்று வாழ்பவர்களாகவும், இன்னும் இறையச் சத்துடன் நன்னடத்தையை மேற்கொள்ப வர்களாகவும் திகழ வேண்டும். அல்லாஹ் (இத்தகைய) நன்னடத்தையுடையோரை நேசிக்கின்றான் (எனும் 5:93ஆவது இறை வசனம்).
அனஸ்(ரலி) அறிவித்தார்.
(மதுபானம் தடைசெய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரிச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்.
அபுந் நுஅமான்(ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் இப்னு சலாம்(ரஹ்) அதிகப்படியாக அறிவித்ததாவது:
அனஸ்(ரலி) கூறினார்: (மதுபானம் தடைசெய்யப்பட்ட நாளில்) நான் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடைசெய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்திரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவித்தார். இதைக் கேட்டதும் அபூ தல்ஹா(ரலி), ‘வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)’ எனக் கூறினார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), ‘இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மதுபானம் தடைசெய்யப்பட்டுவிட்டது என்று அறிவித்தார்’ என்று சொன்னேன். அதற்கு அபூ தல்ஹா(ரலி) என்னிடம்,’நீ போய், இதைக் கொட்டிவிடு!’ என்று கூறினார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களின் மதுபானம் (பழுக்காத) பேரிச்சங்காய் மதுவாக இருந்தது. அப்போது மக்களில் சிலர், ‘(உஹுதுப் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!’ என்று கூறினார். அப்போதுதான் ‘இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில் ) எதையேனும் (தடைசெய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்களின் மீது (அது) குற்றமாகாது.’ எனும் (திருக்குர்ஆன் 05:93 வது இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.
Book : 65
(புகாரி: 4620)بَابُ {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا} [المائدة: 93] إِلَى قَوْلِهِ: {وَاللَّهُ يُحِبُّ المُحْسِنِينَ} [آل عمران: 134]
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ الخَمْرَ الَّتِي أُهْرِيقَتْ الفَضِيخُ، وَزَادَنِي مُحَمَّدٌ البِيكَنْدِيُّ، عَنْ أَبِي النُّعْمَانِ، قَالَ
كُنْتُ سَاقِيَ القَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ، فَنَزَلَ تَحْرِيمُ الخَمْرِ، فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى، فَقَالَ أَبُو طَلْحَةَ: اخْرُجْ فَانْظُرْ مَا هَذَا الصَّوْتُ، قَالَ: فَخَرَجْتُ فَقُلْتُ: هَذَا مُنَادٍ يُنَادِي: «أَلاَ إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ»، فَقَالَ لِي: اذْهَبْ فَأَهْرِقْهَا، قَالَ: فَجَرَتْ فِي سِكَكِ المَدِينَةِ، قَالَ: وَكَانَتْ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الفَضِيخَ، فَقَالَ بَعْضُ القَوْمِ: قُتِلَ قَوْمٌ وَهْيَ فِي بُطُونِهِمْ، قَالَ: فَأَنْزَلَ اللَّهُ: {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا} [المائدة: 93]
சமீப விமர்சனங்கள்