பாடம் : 13 (கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்கு களான) பஹீரா, ஸாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றையெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. மாறாக, மறுப்பாளர்கள் தாம் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் (இத்தகைய மூட நம்பிக்கை களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு) அறிவற்றவர்களாய் இருக்கின்றனர் (எனும் 5:103ஆவது இறைவசனம்). (5:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ இஃத் காலல்லாஹ் எனும் சொற்றொட ரில் உள்ள கால(சொன்னான்) எனும் (இறந்த கால வினைச்) சொல்லுக்குச் சொல்வான் என்று (எதிர்கால வினையின்) பொருளாகும். இந்த வசனத்திலள்ள இஃத் எனும் சொல் சொல்லிடை இணைப்புக் குறி (ஸிலா) ஆகும். (5:112ஆவது வசனத்திலுள்ள வினை யாலணையும் பெயரான) அல்மாயிதா எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொருத்தவரை விருந்தாக்கப்படும் உணவு எனும்) செயப்பாட்டு எச்ச வினையாகும். ஈஷத்துன் ராளியா (திருப்தியான வாழ்க்கை), தத்லீக் கத்துல்பாயினா (இறுதிசெய்யப்பட்ட விவாகரத்து) ஆகிய சொற்றொடர்களைப் போல. (இதன்படி அல்மாயிதா என்பதன்) சொற்பொருள் விருந்தாளிக்கு அளிக்கப்படும் நல்ல உணவு என்பதாகும். (இஷ்திகாக் எனும் சொல் திரிபு வேறுபாட்டில் இச்சொல்லை ஃபஅல, யஃப்இலு எனும் வாய்பாட்டில்) மாத,யமீது (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (3:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முத்தவஃப்பீக்க எனும் சொல்லுக்கு உம்மை இறக்கச் செய்வோம்என்பது கருத்தாகும்.18
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.
‘பஹீரா’ என்பது, (அறியாமைக்கால) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால்கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டு வந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள்.
‘சாயிபா’ என்பது, (அறியாமைக்கால) சிலைகளுக்கா (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டு வந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள்.
‘சாயிபா’ என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படவதில்லை. (அது நினைத்த தண்ணீரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்கமாட்டார்கள்.)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அம்ர் இப்னு ஆமிர் அல்குஸாஈ’ தம் குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை கண்டேன். முதன் முதலாக ‘சாயிபா’ (ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்துத்) திரியவிட்டவர் அவர்தாம்.
‘வஸிலா’ என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டியிடுகிற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டு வந்தனர். இரண்டு(ஈற்று)க்கு மத்தியில் ஆண்குட்டியிடாமல் ஒன்றையடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதனால் (இதனைத் ‘தொடர்ந்து வரக்கூடியது’ எனும் பொருளில்) ‘வஸீலா’ என்று அழைத்தனர்.
‘ஹாம்’ என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல்கொள்ளச் செய்த (பொலி) ஒட்டகமாகும். இவ்வாறு சூல்கொள்ளச் செய்த பின் அந்த (பொலி) ஒட்டகத்தை (அறியாமைக்கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காகவிட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல்விட்டுவிட்டார்கள்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்படவில்லை. இதனை ‘ஹாமீ(தன் முதுகைப் பாதுகாத்துக் கொண்ட ஒட்டகம்) என்று பெயரிடடு அழைத்தனர்.
இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் மேற்சொன்ன விளக்கமும் ஹதீஸும் வந்துள்ளன.
Book : 65
(புகாரி: 4623)بَابُ {مَا جَعَلَ اللَّهُ مِنْ بَحِيرَةٍ وَلاَ سَائِبَةٍ، وَلاَ وَصِيلَةٍ وَلاَ حَامٍ} [المائدة: 103]
{وَإِذْ قَالَ اللَّهُ} [المائدة: 116]: ” يَقُولُ: قَالَ اللَّهُ، وَإِذْ هَا هُنَا صِلَةٌ. الْمَائِدَةُ: أَصْلُهَا مَفْعُولَةٌ، كَعِيشَةٍ رَاضِيَةٍ، وَتَطْلِيقَةٍ بَائِنَةٍ، وَالمَعْنَى: مِيدَ بِهَا صَاحِبُهَا مِنْ خَيْرٍ، يُقَالُ: مَادَنِي يَمِيدُنِي ” وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {مُتَوَفِّيكَ} [آل عمران: 55]: «مُمِيتُكَ»
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، قَالَ: ” البَحِيرَةُ: الَّتِي يُمْنَعُ دَرُّهَا لِلطَّوَاغِيتِ، فَلاَ يَحْلُبُهَا أَحَدٌ مِنَ النَّاسِ، وَالسَّائِبَةُ: كَانُوا يُسَيِّبُونَهَا لِآلِهَتِهِمْ لاَ يُحْمَلُ عَلَيْهَا شَيْءٌ ” قَالَ: وَقَالَ أَبُو هُرَيْرَةَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ، كَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ» وَالوَصِيلَةُ: النَّاقَةُ [ص:55] البِكْرُ، تُبَكِّرُ فِي أَوَّلِ نِتَاجِ الإِبِلِ، ثُمَّ تُثَنِّي بَعْدُ بِأُنْثَى، وَكَانُوا يُسَيِّبُونَهَا لِطَوَاغِيتِهِمْ، إِنْ وَصَلَتْ إِحْدَاهُمَا بِالأُخْرَى لَيْسَ بَيْنَهُمَا ذَكَرٌ، وَالحَامِ: فَحْلُ الإِبِلِ يَضْرِبُ الضِّرَابَ المَعْدُودَ، فَإِذَا قَضَى ضِرَابَهُ وَدَعُوهُ لِلطَّوَاغِيتِ، وَأَعْفَوْهُ مِنَ الحَمْلِ، فَلَمْ يُحْمَلْ عَلَيْهِ شَيْءٌ وَسَمَّوْهُ الحَامِيَ ” وقَالَ لِي أَبُو اليَمَانِ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ سَعِيدًا، قَالَ: يُخْبِرُهُ بِهَذَا، قَالَ: وَقَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: نَحْوَهُ، وَرَوَاهُ ابْنُ الهَادِ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்