தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4628

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேருந்தோ உங்கன் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்கல் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ எனும் (6:65ஆவது) வசனத் தொடர். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) யல்பிஸகும்’ எனும் சொல்லுக்குக் கலந்து விடுவது’ என்று பொருள். இது இல்த்திபாஸ்’ எனும் வேர்ச் சொல்ருந்து பிறந்ததாகும். ஷியஉ’ எனும் சொல்லுக்குப் பிரிவுகள்’ என்று பொருள்.

 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்’ எனும் (திருக்குர்ஆன் 06:65 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, ‘உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்களின் மீது இறக்கவும் வைக்கவும் அதன் ஆற்றலுள்ளவன்’ என்பதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(இறைவா!) உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார்கள். ‘உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ’ என்று கூறினார்கள். ‘அல்லது உங்களைப் பல்வேறு குழுககளாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்’ என்பதைக் கேட்டவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘இது (முந்தைய வேதனையை விட) ‘எளிதானது’ அல்லது ‘இது சுலபமானது’ ஆகும்’ என்று கூறினார்கள்.

Book : 65

(புகாரி: 4628)

بَابُ قَوْلِهِ: {قُلْ: هُوَ القَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} [الأنعام: 65] الآيَةَ

{يَلْبِسَكُمْ} [الأنعام: 65]: «يَخْلِطَكُمْ مِنَ الِالْتِبَاسِ»، {يَلْبِسُوا} [الأنعام: 82]: «يَخْلِطُوا»، {شِيَعًا} [الأنعام: 65]: «فِرَقًا»

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {قُلْ هُوَ القَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} [الأنعام: 65]، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعُوذُ بِوَجْهِكَ»، قَالَ: {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} [الأنعام: 65]، قَالَ: «أَعُوذُ بِوَجْهِكَ» {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ} [الأنعام: 65] قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا أَهْوَنُ – أَوْ هَذَا أَيْسَرُ -»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.