பாடம் : 4 ‘(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நேரான பாதையில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும்விட இவர்கள் ஒவ்வொரு வரையும் நாம் மேன்மையாக்கினோம்’ எனும் (6:86ஆவது) இறைவசனம்.
அபுல் ஆலியா ருஃபைஉ இப்னு மிஹ்ரான்(ரஹ்) கூறினார்.
உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.
‘நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிறந்தவன்’ என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.
Book : 65
(புகாரி: 4630)بَابُ قَوْلِهِ: {وَيُونُسَ، وَلُوطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى العَالَمِينَ} [الأنعام: 86]
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي العَالِيَةِ، قَالَ: حَدَّثَنِي ابْنُ عَمِّ نَبِيِّكُمْ، يَعْنِي ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى
சமீப விமர்சனங்கள்