பாடம் : 6 நகமுடைய பிராணிகள் ஒவ்வொன்றையும் யூதர்களுக்கு நாம் தடைசெய்திருந்தோம். அவர்களுக்கு ஆடு மாடுகன் கொழுப்பை யும் தடைசெய்திருந்தோம் (எனும் 6:146 ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நகமுடைய ஒவ்வொரு பிராணியும் என்பது, ஒட்டகத்தையும் தீக்கோழியையும் குறிக்கும். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹவாயா’ என்பது குடல்களைக் குறிக்கும்.12 மற்றவர்கள்கூறுகின்றனர்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹாதூ’ என்பதற்கு யூதர்களாய் ஆகிவிட்ட வர்கள்’ என்று பொருள். (இதே சொல்ருந்து பிறந்த 7:156 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹுத்னா’ என்பதற்கு பாவமன்னிப்புக் கோரினோம்’ என்று பொருள். (இதன் வினையாலணையும் பெயரான) ஹாயித்’ என்பதற்கு பாவமன்னிப்புக் கோருகின்றவர்’ என்று பொருள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணிகளின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள்.
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
இது வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 65
(புகாரி: 4633)بَابُ قَوْلِهِ: {وَعَلَى الَّذِينَ هَادُوا حَرَّمْنَا كُلَّ ذِي ظُفُرٍ، وَمِنَ البَقَرِ وَالغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَا} [الأنعام: 146] الآيَةَ
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” كُلَّ ذِي ظُفُرٍ: البَعِيرُ وَالنَّعَامَةُ. {الحَوَايَا} [الأنعام: 146]: «المَبْعَرُ» وَقَالَ غَيْرُهُ: ” هَادُوا: صَارُوا يَهُودًا، وَأَمَّا قَوْلُهُ: {هُدْنَا} [الأعراف: 156]: تُبْنَا، هَائِدٌ: تَائِبٌ
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، قَالَ عَطَاءٌ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«قَاتَلَ اللَّهُ اليَهُودَ لَمَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِمْ شُحُومَهَا جَمَلُوهُ، ثُمَّ بَاعُوهُ، فَأَكَلُوهَا» وَقَالَ أَبُو عَاصِمٍ: حَدَّثَنَا عَبْدُ الحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَيَّ عَطَاءٌ، سَمِعْتُ جَابِرًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
சமீப விமர்சனங்கள்