தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4635

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 (6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வ(க்)கீல்’ எனும் சொல்லுக்குக் கண்காணித்துப் பாதுகாப்பவன்’ என்று பொருள். (6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) குபுல்’ எனும் சொல் கபீல் எனும் சொல்ன் பன்மையாகும். பல வகை வேதனைகள்’ என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் கபீல்’ என்று கூறப்படும். (6: 112ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுக்ருஃபுல் கவ்ல்’ எனும் சொற்றொட ரானது, நீ எழிலூட்டி அலங்கரித்துக் காட்டும் எல்லா போகளையும் குறிக்கும். (6:138ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹிஜ்ர்’ எனும் சொல்லுக்குத் தடுக்கப்பட்டது’ என்று பொருள். தடைவிதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் ஹிஜ்ருன் மஹ்ஜுர்’ எனப் படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் அல் ஹிஜ்ர்’ எனலாம். பெட்டைக் குதிரையும் ஹிஜ்ர்’ எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவும் ஹிஜ்ர்’ என்றும்,ஹிஜா’ என்றும் சொல்லப்படுவதுண்டு. ஸமூத்’ குலத்தார் வாழ்ந்த பகுதியும் ஹிஜ்ர்’ எனப்படுவதுண்டு. தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் ஹிஜ்ர்’ எனப்படும். இதனால்தான், இறை யில்லம் கஅபாவை ஒட்டியுள்ள ஹத்தீம்’ (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) ஹிஜ்ர்’ (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது. (ஃபஈல்’ எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) ஹத்தீம்’ எனும் சொல் (செயப்பாட்டு வினை எச்சமான) மஹ்த்தூம்’ (பிரிக்கப்பட்டது) என்ற பொருள்கொண்டதாகும். கத்தீல்’ என்பதற்கு மக்த்தூல்’ (கொல்லப்பட்டவன்) உடைய பொருள் இருப்பதைப் போல. யமாமாவின் ஹஜ்ர்’ என்பது, (யமனுக்கும் ஹிஜாஸுக்கும் இடையிலுள்ள) ஒரு பகுதியாகும். பாடம் : 9 ‘உங்கள் சாட்சிகளைக் கொண்டுவாருங்கள்’ எனும் (6:150ஆவது) வசனத் தொடர். (இவ்சனத்தின் மூலத்திலுள்ள) ஹலும்ம’ (கொண்டுவாருங்கள்) எனும் சொல் ஹிஜாஸ் வாசிகன் மொழி வழக்குப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் ஆக, அனைத்துக் குமே பயன்படுத்தப்படுவதாகும். பாடம் : 10 உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெப்படும் (இறுதி) நாளன்று, முன்னரே நம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கோ,அல்லது நம்பிக்கை கொண்டிருந்தாலும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனித ருக்கோ அவர் (அப்போது) நம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அக்காது (எனும் 6:158ஆவது வசனத் தொடர்).

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருபபவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் நம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதனுக்கும் அவன் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 65

(புகாரி: 4635)

بَابُ قَوْلِهِ: {هَلُمَّ شُهَدَاءَكُمُ} [الأنعام: 150]

لُغَةُ أَهْلِ الحِجَازِ: هَلُمَّ لِلْوَاحِدِ وَالِاثْنَيْنِ وَالجَمِيعِ

بَابُ {لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا} [الأنعام: 158]

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ، حَدَّثَنَا عُمَارَةُ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ: {لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ} [الأنعام: 158]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.