தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4638

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 நாம் குறிப்பிட்டிருந்த நேரத்தில் (குறித்த இடத்திற்கு) மூசா வந்தார். பிறகு அவருடைய இறைவன் அவரிடம் உரையாடியபோது ‘என் இறைவா! எனக்கு உன்னைக் காண்பிப் பாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்’ என்று அவர் வேண்டினார். அதற்கு இறைவன், ‘என்னை நீர் ஒருபோதும் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலை யைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீர் காண முடியும்’ என்று கூறினான். அவ்வாறே அவருடைய இறைவன் அம் மலையின் மீது வெப்பட்ட போது அது பொடிப் பொடியாகிவிட்டது; மூசாவும் திடுக்கிட்டு மயங்கி விழுந்தார். பிறகு உணர்வு பெற்றபோது ‘உன்னை நான் துதிக்கிறேன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும்,நான் நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானவனாக இருக்கின்றேன்’ என்று கூறினார் (எனும் 7:143ஆவது வசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அரினீ’ எனும் சொல்லுக்கு எனக்கு வழங்குவாயாக’ என்று பொருள்.

 அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தம் முகத்தில் அறைவாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?’ என்று கேட்க அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், ‘மனிதர்கள் அனைவரிலும் மூஸாவை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!’ என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், ‘முஹம்மதை விடவுமா?’ என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைத்தூதர்களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகிறவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியாசனத்தின் (அர்யுன்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது ‘தூர்சீனா’ மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்ற போது) அடைந்த மூர்ச்சைக்கு பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டாரா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

Book : 65

(புகாரி: 4638)

بَابُ {وَلَمَّا جَاءَ مُوسَى لِمِيقَاتِنَا وَكَلَّمَهُ رَبُّهُ، قَالَ: رَبِّ أَرِنِي أَنْظُرْ إِلَيْكَ، قَالَ: لَنْ تَرَانِي وَلَكِنِ انْظُرْ إِلَى الجَبَلِ فَإِنِ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي، فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا، فَلَمَّا أَفَاقَ قَالَ: سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ المُؤْمِنِينَ} [الأعراف: 143]

قَالَ ابْنُ عَبَّاسٍ: ” أَرِنِي: أَعْطِنِي

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى المَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

جَاءَ رَجُلٌ مِنَ اليَهُودِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ لُطِمَ وَجْهُهُ، وَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ رَجُلًا مِنْ أَصْحَابِكَ مِنَ الأَنْصَارِ لَطَمَ فِي وَجْهِي، قَالَ: «ادْعُوهُ» فَدَعَوْهُ، قَالَ: «لِمَ لَطَمْتَ وَجْهَهُ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَرَرْتُ بِاليَهُودِ، فَسَمِعْتُهُ يَقُولُ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى البَشَرِ، فَقُلْتُ: وَعَلَى مُحَمَّدٍ، وَأَخَذَتْنِي غَضْبَةٌ فَلَطَمْتُهُ، قَالَ: «لَا تُخَيِّرُونِي مِنْ بَيْنِ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلَا أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُزِيَ بِصَعْقَةِ الطُّورِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.