பாடம் : 4 ‘ஹித்தத்துன் (எங்கள் பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்று சொல்(யவாறே செல்லு)ங்கள்’ எனும் (7:161ஆவது) வசனத் தொடர்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இஸ்ரவேலர்களிடம், ‘ஹித்ததுன்’ (எங்கள் பாவச்சுமையை இறக்கிடுவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாசலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவோம்’ என்று கூறப்பட்டது. ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் பிட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும், (உள்ளே நுழையும் போது) ‘ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்’ (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவித்து) என்று (பரிகாசமாகச்) கூறினார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 65
(புகாரி: 4641)بَابُ {وَقُولُوا حِطَّةٌ} [البقرة: 58]
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ: {ادْخُلُوا البَابَ سُجَّدًا، وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ} [البقرة: 58]، فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، وَقَالُوا: حَبَّةٌ فِي شَعَرَةٍ
சமீப விமர்சனங்கள்