பாடம் : 5 (பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகி விடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத் தொடர்).
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(காரிஜிய்யா கூட்டத்தைச் சேர்ந்த) ஒருவர் என்னிடம் வந்து, ‘அபூ அப்திர் ரஹ்மானே! அல்லாஹ் தன் வேதத்தில் (பின் வருமாறு) கூறியிருப்பதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார். ‘இறை நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டால் அவ்விரு வருக்குமிடையே சமாதானப்படுத்தி விடுங்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரின் மீது (வரம்பு மீறி) அக்கிரமம் புரிந்தால் அக்கிரமம் புரிந்தவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் வரும்வரை அவர்களை நீங்கள் எதிர்த்துப் போரிடுங்கள். அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளின் பக்கம்) திரும்பிவிட்டால், நியாயமான முறையில் அவ்விருவருக்கிடையே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் நீதி வான்களை நேசிக்கிறான்’ (திருக்குர்ஆன் 49:09). ‘இந்நிலையில், அல்லாஹ் தன் வேதத்தில் கூறியுள்ளபடி நீங்கள் போரிட முன்வராமல் இருப்பது ஏன்?’ என்றும் கேட்டார். நான், ‘என் சகோதரர் மகனே! இந்த (திருக்குர்ஆன் 49:9 வது) வசனத்திற்கு ஏதேனும் சமாதானம் கூறிவிட்டு (முஸ்லிம்களில் ஒரு பிரிவினருக்குக்கெதிராகப்) போர் புரியாமல் இருந்துவிடுவது, ‘ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலைசெய்தால் அவனுக்குரிய பிரதிபலன் நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்து கிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் உள்ளது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ளான்’ என்ற (திருக்குர்ஆன் 04:93 வது) வசனத்திற்கு சமாதானம் சொல்வதைவிட எனக்கு உவப்பானதாயிருக்கும்’ என்று கூறினேன்.அந்த மனிதர்’ ‘(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிடும்வரை அவர்களுடன் நீங்கள் போர் புரியுங்கள்’ (திருக்குர்ஆன் 08:39) என்று அல்லாஹ் கூறுகிறானே!’ என்று கேட்டார். நான், ‘(இதை) நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் செயல்படுத்தி விட்டோம். அப்போது இஸ்லாம் (உறுப்பினர் எண்ணிக்கையில்) குறைவானதாக இருந்தது. அப்போது (இஸ்லாத்தை ஏற்ற) ஒருவர் தம் மார்க்கத்தின் விஷயத்தில் குழப்பத்திற்கு(ம் சோதனைக்கும்) உள்ளாக்கப்பட்டார்; ஒன்று (எதிரிகள்) அவரைக் கொன்றுவிடுவார்கள். முடிவில் இஸ்லாம் (அதன் உறுப்பினர்களால்) அதிகரித்தபோது எந்தக் குழப்பமும் (எஞ்சி) இருக்கவில்லை’ என்று பதிலளித்தேன். தாம் எண்ணி வந்ததற்கு நான் இணங்காததை அவர் கண்டதும், ‘அலீ இப்னு அபீ தாலிப்) மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான்) விஷயத்தில் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார். நான், ‘அலீ மற்றும் உஸ்மான் ஆகியோர் விஷயத்தில் என் கருத்து (இதுதான்:) உஸ்மான்(ரலி) அவர்களை அல்லாஹ்வே மன்னித்துவிட்டான். ஆனால், அவர்களை மன்னிக்க நீங்கள் விரும்பவில்லை. அலீ(ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகனும் நபியவர்களின் மருமகனுமாவார்கள்’ என்று கூறினேன்.
(இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்:)
இப்னு உமர்(ரலி) ‘இதோ நீங்கள் காண்கிற இந்த இடத்தில் உள்ளது தான் நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமாவின்) இல்லமாகும்’- என்று தம் கரத்தால் சைகை செய்தவாறு – கூறினார்கள்.
Book : 65
(புகாரி: 4650)بَابُ {وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ} [الأنفال: 39]
حَدَّثَنَا الحَسَنُ بْنُ عَبْدِ العَزِيزِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى، حَدَّثَنَا حَيْوَةُ، عَنْ بَكْرِ بْنِ عَمْرٍو، عَنْ بُكَيْرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَجُلًا، جَاءَهُ فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَلاَ تَسْمَعُ مَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ: {وَإِنْ طَائِفَتَانِ مِنَ المُؤْمِنِينَ اقْتَتَلُوا} [الحجرات: 9] إِلَى آخِرِ الآيَةِ، فَمَا يَمْنَعُكَ أَنْ لاَ تُقَاتِلَ كَمَا ذَكَرَ اللَّهُ فِي كِتَابِهِ؟ فَقَالَ: ” يَا ابْنَ أَخِي أَغْتَرُّ بِهَذِهِ الآيَةِ وَلاَ أُقَاتِلُ، أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَغْتَرَّ بِهَذِهِ الآيَةِ، الَّتِي يَقُولُ اللَّهُ تَعَالَى: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا} [النساء: 93] إِلَى آخِرِهَا “، قَالَ: فَإِنَّ اللَّهَ يَقُولُ: {وَقَاتِلُوهُمْ حَتَّى لاَ تَكُونَ فِتْنَةٌ} [الأنفال: 39]، قَالَ ابْنُ عُمَرَ: «قَدْ فَعَلْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ كَانَ الإِسْلاَمُ قَلِيلًا، فَكَانَ الرَّجُلُ يُفْتَنُ فِي دِينِهِ إِمَّا يَقْتُلُونَهُ وَإِمَّا يُوثِقُونَهُ، حَتَّى كَثُرَ الإِسْلاَمُ فَلَمْ تَكُنْ فِتْنَةٌ»، فَلَمَّا رَأَى أَنَّهُ لاَ يُوَافِقُهُ فِيمَا يُرِيدُ، قَالَ: «فَمَا قَوْلُكَ فِي عَلِيٍّ، وَعُثْمَانَ؟» قَالَ ابْنُ عُمَرَ: ” مَا قَوْلِي فِي عَلِيٍّ، وَعُثْمَانَ؟ أَمَّا عُثْمَانُ: فَكَانَ اللَّهُ قَدْ عَفَا عَنْهُ فَكَرِهْتُمْ أَنْ يَعْفُوَ عَنْهُ، وَأَمَّا عَلِيٌّ: فَابْنُ عَمِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَتَنُهُ – وَأَشَارَ بِيَدِهِ – وَهَذِهِ ابْنَتُهُ – أَوْ بِنْتُهُ – حَيْثُ تَرَوْنَ
சமீப விமர்சனங்கள்