தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4655

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஆகவே, (இணைவைப்பவர்களே!) நீங்கள் (விரும்பியபடி) பூமியில் நான்கு மாதங்கள் (எங்கு வேண்டுமானாலும்) சுற்றித் திரியுங்கள். நீங்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியாது என்பதையும் அல்லாஹ் மறுப்பாளர்களை இழிவுபடுத்து வான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்எனும் (9:2ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) சீஹூ எனும் சொல்லுக்குச் சுற்றித் திரியுங்கள் என்று பொருள்.

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அபூ பக்ர்(ரலி) தலைமையில் ‘ஹஜ்ஜத்துல் வதா’விற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது அபூ பக்ர்(ரலி) ‘இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய(வர)க்கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி வரக்கூடாது’ என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் அனுப்பிவைத்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்: பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்:

எங்களுடன் அலீ(ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹஜ் 10ஆம்) நாளில் மினாவாசிகளிடையே ‘(இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்தும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி வரக் கூடாது என்றும் அறிவித்தார்கள்.

Book : 65

(புகாரி: 4655)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، وَأَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

بَعَثَنِي أَبُو بَكْرٍ فِي تِلْكَ الحَجَّةِ فِي مُؤَذِّنِينَ بَعَثَهُمْ يَوْمَ النَّحْرِ يُؤَذِّنُونَ بِمِنًى، أَنْ لاَ يَحُجَّ بَعْدَ العَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ، قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: ثُمَّ «أَرْدَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ»، قَالَ أَبُو هُرَيْرَةَ: فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ يَوْمَ النَّحْرِ فِي أَهْلِ مِنًى بِبَرَاءَةَ، «وَأَنْ لاَ يَحُجَّ بَعْدَ العَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.