தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4665

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அபீ முலைக்கா அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்குமிடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் காலையில் சென்று, ‘நீங்கள் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் போரிட்டு அல்லாஹ்வின் (புனிதத் தலமான) ஹரமை (இரத்தம் சிந்த) அனுமதிக்கப்பட்ட இடமாக (ஹலாலானதாக) ஆக்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவன் காப்பாற்றட்டும். இப்னு ஸுபைரையும் பனூ உமய்யாக்களையும் தாம் ஹரமில் போர் புரிவதை அனுமதிக்கிறவர்களாக அல்லாஹ் எழுதி வைத்துள்ளான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.’ என்று கூறினார்கள்:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: மக்கள் (என்னிடம்) ‘இப்னு ஸுபைர் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். நான், ‘இந்த ஆட்சியதிகாரம் அவரைவிட்டு எங்கே போய்விடும்? அவரின் தந்தையோ நபி(ஸல்) அவர்களின் பிரத்தியேக உதவியாளராவார் – ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் – அவரின் தாயாரோ ‘கச்சுடையாள்’ (என்று நபி(ஸல்) அவர்களால் பட்டப் பெயர் சூட்டப்பெற்றவர்) ஆவார். – அஸ்மா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் – அவர்களின் சிறிய தாயாரோ இறைநம்பிக்கையாளர்களின் அன்னையாவார். – ஆயிஷா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள் – அவர்களின் அத்தையோ நபி(ஸல்) அவர்களின் துணைவியராவார்- கதீஜா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களின் அத்தையோ அவரின் பாட்டியாவார். -ஸஃபிய்யா(ரலி) அவர்களையே குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர், இஸ்லாத்தில் நெறி தவறாதவர்; குர்ஆனை நன்கறிந்தவர். அல்லாஹ்வின் மீதாணையாக! உமய்யாக்கள் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றால் சொந்தத்தின் காரணத்தினால் உறவாடுகிறார்கள்.எனக்கு அவர்கள் ஆட்சியாளர்களானால் அதற்குத் தகுதியுடையோராயும் சிறந்த பாரம்பரியமுடையோராயுமே ஆட்சியாளர்களாகின்றனர். (அப்படியிருந்தும் நான் அவர்களைத் கைவிட்டு, இப்னு ஸுபைருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய உறுதி பூண்டேன். ஆனால்) அவரோ ‘துவைத்’களுக்கும், ‘உசாமா’க்களுக்கும், ‘ஹுமைதா’க்களுக்கும் (என்னைவிட) முன்னுரிமை அளித்துவிட்டார். (இப்னு ஸுபைரின் குலத்தினரான) ‘பனூ அஸத்’ குலத்தைச் சேர்ந்த பனூ துவைத், பனூ உசாமா, பனூ ஹுமைத் ஆகிய குடும்பங்களையே குறிப்பிடுகிறார்கள்.இப்னு அபில் ஆஸ் – அப்துல் மலிக் இப்னு மர்வான் – அவர்கள் (தம் சகாக்களிடையே பல சிறப்புகள் பெற்று) முன்னேறிச் செல்கிறார். இவரோ – இப்னு ஸுபைரோ – பின்னடைவுக்கு ஆளாகிவிட்டார்.

Book :65

(புகாரி: 4665)

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ: قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ: وَكَانَ بَيْنَهُمَا شَيْءٌ

فَغَدَوْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ، فَقُلْتُ: أَتُرِيدُ أَنْ تُقَاتِلَ ابْنَ الزُّبَيْرِ، فَتُحِلَّ حَرَمَ اللَّهِ؟ فَقَالَ: «مَعَاذَ اللَّهِ، إِنَّ اللَّهَ كَتَبَ ابْنَ الزُّبَيْرِ وَبَنِي أُمَيَّةَ مُحِلِّينَ، وَإِنِّي وَاللَّهِ لَا أُحِلُّهُ أَبَدًا»، قَالَ: قَالَ النَّاسُ: بَايِعْ لِابْنِ الزُّبَيْرِ فَقُلْتُ: ” وَأَيْنَ بِهَذَا الأَمْرِ عَنْهُ، أَمَّا أَبُوهُ: فَحَوَارِيُّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يُرِيدُ الزُّبَيْرَ – وَأَمَّا جَدُّهُ: فَصَاحِبُ الغَارِ – يُرِيدُ أَبَا بَكْرٍ – وَأُمُّهُ: فَذَاتُ النِّطَاقِ – يُرِيدُ أَسْمَاءَ – وَأَمَّا خَالَتُهُ: فَأُمُّ المُؤْمِنِينَ – يُرِيدُ عَائِشَةَ – وَأَمَّا عَمَّتُهُ: فَزَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يُرِيدُ خَدِيجَةَ – وَأَمَّا عَمَّةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَجَدَّتُهُ – يُرِيدُ صَفِيَّةَ – ثُمَّ عَفِيفٌ فِي الإِسْلاَمِ، قَارِئٌ لِلْقُرْآنِ، وَاللَّهِ إِنْ وَصَلُونِي وَصَلُونِي مِنْ قَرِيبٍ، وَإِنْ رَبُّونِي رَبُّونِي أَكْفَاءٌ كِرَامٌ، فَآثَرَ التُّوَيْتَاتِ وَالْأُسَامَاتِ وَالْحُمَيْدَاتِ يُرِيدُ أَبْطُنًا مِنْ بَنِي أَسَدٍ بَنِي تُوَيْتٍ وَبَنِي أُسَامَةَ وَبَنِي أَسَدٍ، إِنَّ ابْنَ أَبِي العَاصِ بَرَزَ يَمْشِي القُدَمِيَّةَ – يَعْنِي عَبْدَ المَلِكِ بْنَ مَرْوَانَ – وَإِنَّهُ لَوَّى ذَنَبَهُ – يَعْنِي ابْنَ الزُّبَيْرِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.