தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4680

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (10:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபக்த்தலத்த (அது கலந்தது) என்பதன் கருத்தாவது: அந்த (மழை) நீரினால் பல்வேறு நிறங்களில் (மனிதனும் மிருகமும் புசிக்கின்ற புற்பூண்டுகளாக) முளைத்தன. (அல்லாஹ் கூறுகின்றான்:) அல்லாஹ்வுக்கு சந்ததி உண்டென்று அவர்கள் கூறுகின் றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததி முத-யவற்றின்) தேவையற்றவன். (10:68) ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (10:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கதம ஸித்கின் எனும் சொல் முஹம்மத் (ஸல்) அவர்களைக் குறிக்கிறது. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (கதம ஸித்கின் எனும்) இச்சொல்லுக்கு, (முன்னேற்பாடாகச் செய்த) நன்மை என்று பொருள். (10:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தில்க்க ஆயாத் (இவை இவ்வேதத்தின் வசனங்களாகும்) எனும் வாக்கியத்திற்கு இவை இவ்வேதத்தின் குறியீடுகளாகும் என்று பொருள்.2 இதைப் போன்றே (10:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஜரைன பிஹிம் (அவர்களை நடத்திச் சென்றது) என்பதற்கு பிக்கும் (உங்களை நடத்திச் சென்றது) என்று பொருள். (10:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தஅவாஹும் எனும் சொல்லுக்கு அவர்களது பிரார்த்தனைஎன்று பொருள். (10:22ஆவது வசனத்தில்) நிச்சயமாக நாம் (அலைகளால் நாலாபக்கங்களிலிருந்தும்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம் என்பதற்கு அழிவை நெருங்கிவிட்டோம் என்று பொருள். (அல்லாஹ் கூறுகின்றான்:) அவர்களுடைய பாவம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது (2:81) (10:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபஅத்பஅஹும் எனும் சொல்லும் (அதே வேர்ச் சொல்லில் இருந்து வந்த) ஃபத்தபஅ ஹும் எனும் சொல்லும் (அவர்களைப் பின்தொடர்ந்தனர் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) அத்வ் எனும் சொல் உத்வான் (வரம்பு மீறல்) எனும் சொல் வகையைச் சேர்ந்ததாகும். முஜாஹித் ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: மனிதர்கள் நன்மையைப் பெற அவசரப்படுவதைப் போல், (அவர்கள் அவசரப்பட்டுக் கோரும்) தீமையை அல்லாஹ் அவர்களுக்கு அவசரமாக வழங்கினால், அவர்களின் ஆயுள் அவர்களுக்கு (என்றோ) முடிக்கப்பட்டிருக்கும் எனும் (10:11ஆவது) வசனத்தின் கருத்தாவது: மனிதன் கோபப்படுகின்றபோது தன் குழந்தை மற்றும் தன் செல்வத்தைப் பார்த்து அல்லாஹ்வின் சாபம் இதன் மீது உண்டாகட்டும்! இதில் வளம் (பரக்கத்) இல்லாமல் போகட் டும்! என்று பிரார்த்திக்க, அதை அல்லாஹ் அவசரப்பட்டு நடைமுறைப்படுத்தினால், யாருக்கெதிராக இது கூறப்பட்டதோ அவர் (உடனுக்குடன்) அழிக்கப்பட்டிருப்பார்; அவரை அல்லாஹ் இறக்கச் செய்திருப்பான். நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமும் கிடைக்கும் எனும் (10:26ஆவது) வசனத்தின் கருத்தாவது: நன்மை செய்தவர்களுக்கு அதுபோன்ற நன்மையும், அதைவிடக் கூடுதலாகப் பாவமன்னிப்பும் கிடைக்கும். மற்றவர்கள் கூறுகிறார்கள்: அதைவிடக் கூடுதலாக அல்லாஹ்வின் தரிசனமும் கிடைக்கும். (10:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்கிப்ரியாஉ எனும் சொல், ஆட்சியதி காரத்தைக் குறிக்கும். பாடம் : 2 மேலும், நாம் இஸ்ராயீ-ன் வழித் தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர் அவ்னும்,அவனுடைய படைகளும் அநீதியும், அக்கிரமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர் அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கிய போது இஸ்ராயீ-ன் வழித் தோன்றல்கள் எந்த இறைவன்மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும், (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன் என்று கூறினான் (எனும் 10:90ஆவது இறைவசனம்). (10:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நுன்ஜீக்க (அல்லது நுனஜ்ஜீக்க) எனும் சொல்லுக்கு உன்னை (பூமியின்) மேடான ஓரிடத்தில் எறிவோம் என்று பொருள்.

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தார்கள். (அங்கு) யூதர்கள் ‘ஆஷூரா’ (முஹர்ரம் 10ஆம் நாள்) நோன்பு நோற்குக் கொண்டிருந்தார்கள். அன்றி அவர்கள், ‘இது மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றிகொண்ட நாள்’ என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் தம்தோழர்களிடம், ‘(யூதர்களான) இவர்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நீங்கள்தாம் அதிக உரிமையுடையவர்கள்; எனவே, (அந்நாளில்) நீங்கள் நோன்பு நோற்பீர்களாக!’ என்று கூறினார்கள்.

Book : 65

(புகாரி: 4680)

بَابُ

سُورَةِ يُونُسَ

وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الأَرْضِ} [يونس: 24]: «فَنَبَتَ بِالْمَاءِ مِنْ كُلِّ لَوْنٍ» وَ {قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سُبْحَانَهُ هُوَ الغَنِيُّ} [يونس: 68] وَقَالَ زَيْدُ بْنُ أَسْلَمَ: {أَنَّ لَهُمْ قَدَمَ صِدْقٍ} [يونس: 2]: «مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَقَالَ مُجَاهِدٌ: «خَيْرٌ»، يُقَالُ: {تِلْكَ آيَاتُ} [البقرة: 252]: «يَعْنِي هَذِهِ أَعْلاَمُ القُرْآنِ»، وَمِثْلُهُ: {حَتَّى إِذَا كُنْتُمْ فِي الفُلْكِ وَجَرَيْنَ بِهِمْ} [يونس: 22]: «المَعْنَى بِكُمْ»، يُقَالُ: {دَعْوَاهُمْ} [الأعراف: 5] «دُعَاؤُهُمْ»، {أُحِيطَ بِهِمْ} [يونس: 22]: «دَنَوْا مِنَ الهَلَكَةِ»، {أَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ} [البقرة: 81]، فَاتَّبَعَهُمْ: «وَأَتْبَعَهُمْ وَاحِدٌ»، {عَدْوًا} [البقرة: 97]: «مِنَ العُدْوَانِ» وَقَالَ مُجَاهِدٌ: {وَلَوْ يُعَجِّلُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَالَهُمْ بِالخَيْرِ} [يونس: 11]: ” قَوْلُ الإِنْسَانِ لِوَلَدِهِ وَمَالِهِ إِذَا غَضِبَ: اللَّهُمَّ لاَ تُبَارِكْ فِيهِ وَالعَنْهُ “. {لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ} [يونس: 11]: «لَأُهْلِكُ مَنْ دُعِيَ عَلَيْهِ وَلَأَمَاتَهُ»، {لِلَّذِينَ أَحْسَنُوا الحُسْنَى} [يونس: 26]: «مِثْلُهَا حُسْنَى». {وَزِيَادَةٌ} [يونس: 26]: «مَغْفِرَةٌ وَرِضْوَانٌ» وَقَالَ غَيْرُهُ: «النَّظَرُ إِلَى وَجْهِهِ الكِبْرِيَاءُ المُلْكُ»

بَابُ {وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ البَحْرَ، فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا، حَتَّى إِذَا أَدْرَكَهُ الغَرَقُ قَالَ: آمَنْتُ أَنَّهُ لاَ إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ المُسْلِمِينَ} [يونس: 90]

{نُنَجِّيكَ} [يونس: 92]: ” نُلْقِيكَ عَلَى نَجْوَةٍ مِنَ الأَرْضِ، وَهُوَ النَّشَزُ: المَكَانُ المُرْتَفِعُ

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَاليَهُودُ تَصُومُ عَاشُورَاءَ، فَقَالُوا: هَذَا يَوْمٌ ظَهَرَ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ: «أَنْتُمْ أَحَقُّ بِمُوسَى مِنْهُمْ فَصُومُوا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.