பாடம்: 3
மத்யனுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம் தூதராக) நியமித்தோம் எனும் (அல்குர்ஆன்: 11:84) ஆவது வசனத் தொடர்.
அதாவது மத்யன்வாசிகளுக்கு நாம் நியமித்தோம் என்று பொருள். ஏனென்றால், மத்யன் என்பது ஓர் ஊராகும்.
இதைப் போன்றுதான் (அல்குர்ஆன்: 12:82) ஆவது வசனத்திலுள்ள, “அந்த ஊரைக் கேளுங்கள்; அந்த ஓட்டகக் கூட்டத்தைக் கேளுங்கள்” என்பதற்கு அந்த ஊர்வாசிகளையும் ஒட்டகக் கூட்டத்தினரையும் (கேளுங்கள்) என்று பொருள்.
(அல்குர்ஆன்: 11:92) ஆவது வசனத்திலுள்ள, “நீங்கள் அவனைப் புறக்கணித்து விட்டீர்கள்” என்பதற்கு இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பவில்லை என ஷுஐப் (அலை) அவர்கள் (அந்த மத்யன்வாசிகளிடம்) சொன்னார்கள் என்று பொருள்.
(இதன் மூலத்திலுள்ள ழிஹ்ரிய்யு என்பதற்கு முதுகுக்கப்பால் என்று பொருள். பொதுவாக ஒரு மனிதன் தன் தேவை நிறைவேறாத போது ழஹர்த்த பி ஹாஜத்தீ (என் தேவையைப் புறக்கணித்து விட்டாய்) என்றும், வ ஜஅல்த்தனீ ழிஹ்ரிய்யன் (என்னை முதுகுக்கப்பால் ஆக்கிவிட்டாய்) என்றும் கூறுவதுண்டு.
ஒரு வாகனப் பிராணியை, அல்லது ஒரு பையை உதவிக்காக உடன் எடுத்துச் செல்வதற்கும் ழிஹ்ரிய்யு என்பர்.
(அல்குர்ஆன்: 11:27) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள அராஃதில் எனும் சொல்லுக்குத் தரம் தாழ்ந்தோர் என்று பொருள்.
(அல்குர்ஆன்: 11:35) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள, இஜ்ராமீ (என் குற்றம்) என்பது அஜ்ரம்த்து எனும் (வினைச்) சொல்லின் வேர்ச் சொல்லாகும். ஜரம்த்து எனும் (வினைச்) சொல்(லின் வேர்ச் சொல்) என்றும் சிலர் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன்: 11:37) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள, அல் ஃபுல்க் எனும் சொல்லே ஒருமைக்கும் பன்மைக்கும் உரியதாகும்.
பொருள்: மரக் கலம், மரக்கலங்கள்.
(அல்குர்ஆன்: 11:41) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள, முஜ்ராஹா எனும் சொல்லுக்கு அது ஓடுகின்றபோது என்று பொருள். இச்சொல் அஜ்ரைத்து எனும் (வினைச்) சொல்லின் வேர்ச் சொல்லாகும். இதிலுள்ள முர்ஸாஹா (நிறுத்தும் போது) எனும் சொல், அர்ஸைத்து எனும் (வினைச்) சொல்லின் (வேர்ச் சொல்லாகும். இதன் பொருள்: நிறுத்தினேன். (இதே சொல் இன்னோர் ஓதல் முறையில்) மர்ஸாஹா என்றும் ஓதப்படுகிறது. (இப்போது அச்சொல்) ரஸத் ஹிய (அது அசையாமல் நின்றது) என்ற வினைச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். மஜ்ராஹா என்பது ஜரத் ஹிய (அது ஓடியது) என்பதிலிருந்து பிரிந்ததாகும். முஜ்ரீஹா, முர்ஸீஹா எனும் சொற்கள், செயப்பாட்டு வினைச் சொற்களாகும். அர் ராஸியாத் எனும் சொல்லுக்கு அசையாத என்று பொருள்.
பாடம்: 4
அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிடக் கொடிய அக்கிரமக்காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவனின் திருமுன் கொண்டுவரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள் இவர்கள்தாம் தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள் என்று கூறுவார்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும் எனும் (அல்குர்ஆன்: 11:18) ஆவது இறைவசனம்.
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அஷ்ஹாத் (சாட்சியாளர்கள்) எனும் சொல்லின் ஒருமை ஷாஹித் என்பதாகும். இது (வாய்பாட்டில்) ஸாஹிப், அஸ்ஹாப் (தோழர்கள்) போன்றதாகும்.
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அறிவித்தார்:
‘(அபூஅப்திர் ரஹ்மான்) இப்னு உமர் (ரலி) (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, அபூஅப்திர்ரஹ்மானே!’ அல்லது ‘இப்னு உமரே!’ (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி (நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?’ என்று கேட்டார்.
அதற்கு இப்னுஉமர் (ரலி), ‘இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார்.’ அல்லது ‘இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.’ அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். அவரிடம் இறைவன்) ‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா’ என்(று கேட்)பான். அவர், ‘(ஆம்) அறிவேன். என் இறைவா! என்று இரண்டு முறை கூறுவார்.
அப்போது இறைவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்னே; இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன் என்று கூறுவான். பிறகு அவரின் நற்செயல்களின் பதிவேடு (அவரிடம் வழங்கப்பட்டுச்) சுருட்டப்படும்.
‘மற்றவர்கள்’ அல்லது ‘இறைமறுப்பாளர்கள்’ சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, ‘இவர்கள்தாம், தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்’ என்று அறிவிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன் என்றார்கள்.
புகாரீ இமாம் கூறுகிறார்:
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அவர்களிடமிருந்து கதாதா நேரடியாக கேட்டார் என, கதாதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷைபான் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அறிவித்தார்.
அத்தியாயம்: 65
(புகாரி: 4685){وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا} [الأعراف: 85]: «أَيْ إِلَى أَهْلِ مَدْيَنَ، لِأَنَّ مَدْيَنَ بَلَدٌ»،
وَمِثْلُهُ {وَاسْأَلِ القَرْيَةَ} [يوسف: 82]: «وَاسْأَلِ العِيرَ، يَعْنِي أَهْلَ القَرْيَةِ وَأَصْحَابَ العِيرِ»،
{وَرَاءَكُمْ ظِهْرِيًّا} [هود: 92]: ” يَقُولُ لَمْ تَلْتَفِتُوا إِلَيْهِ، وَيُقَالُ: إِذَا لَمْ يَقْضِ الرَّجُلُ حَاجَتَهُ، ظَهَرْتَ بِحَاجَتِي، وَجَعَلْتَنِي ظِهْرِيًّا، وَالظِّهْرِيُّ هَا هُنَا: أَنْ تَأْخُذَ مَعَكَ دَابَّةً أَوْ وِعَاءً تَسْتَظْهِرُ بِهِ “،
{أَرَاذِلُنَا} [هود: 27]: «سُقَّاطُنَا إِجْرَامِي هُوَ مَصْدَرٌ مِنْ أَجْرَمْتُ، وَبَعْضُهُمْ يَقُولُ جَرَمْتُ»،
{الفُلْكَ} [الأعراف: 64]: «وَالفَلَكُ وَاحِدٌ، وَهْيَ السَّفِينَةُ وَالسُّفُنُ» (مُجْرَاهَا) ” مَدْفَعُهَا، وَهُوَ مَصْدَرُ أَجْرَيْتُ، وَأَرْسَيْتُ: حَبَسْتُ “، وَيُقْرَأُ: (مَرْسَاهَا): «مِنْ رَسَتْ هِيَ» (وَمَجْرَاهَا): «مِنْ جَرَتْ هِيَ»، وَ (مُجْرِيهَا وَمُرْسِيهَا): «مِنْ فُعِلَ بِهَا»، {رَاسِيَاتٌ} [سبأ: 13]: «ثَابِتَاتٌ»
بَابُ قَوْلِهِ: {وَيَقُولُ الأَشْهَادُ هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ، أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ} [هود: 18] «وَيَقُولُ الأَشْهَادُ
وَاحِدُهُ، شَاهِدٌ مِثْلُ صَاحِبٍ وَأَصْحَابٍ»
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، وَهِشَامٌ، قَالاَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ، قَالَ
بَيْنَا ابْنُ عُمَرَ يَطُوفُ إِذْ عَرَضَ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ – أَوْ قَالَ: يَا ابْنَ عُمَرَ – سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّجْوَى؟ فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يُدْنَى المُؤْمِنُ مِنْ رَبِّهِ – وَقَالَ هِشَامٌ: يَدْنُو المُؤْمِنُ – حَتَّى يَضَعَ عَلَيْهِ كَنَفَهُ فَيُقَرِّرُهُ بِذُنُوبِهِ، تَعْرِفُ ذَنْبَ كَذَا؟ يَقُولُ: أَعْرِفُ، يَقُولُ: رَبِّ أَعْرِفُ مَرَّتَيْنِ، فَيَقُولُ: سَتَرْتُهَا فِي الدُّنْيَا، وَأَغْفِرُهَا لَكَ اليَوْمَ، ثُمَّ تُطْوَى صَحِيفَةُ حَسَنَاتِهِ، وَأَمَّا الآخَرُونَ – أَوِ الكُفَّارُ – فَيُنَادَى عَلَى رُءُوسِ الأَشْهَادِ: {هَؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلاَ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ} [هود: 18] ”
وَقَالَ شَيْبَانُ: عَنْ قَتَادَةَ، حَدَّثَنَا صَفْوَانُ
Bukhari-Tamil-4685.
Bukhari-TamilMisc-4685.
Bukhari-Shamila-4685.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- கதாதா —> ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, புகாரி-2441, 4685, 6070, 7514, முஸ்லிம்-5345, இப்னு மாஜா-183, குப்ரா நஸாயீ-, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,
…
…
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-6069, இப்னு மாஜா-4245,
சமீப விமர்சனங்கள்