“எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் ‘திஹாமா’ மலைகள் போன்ற நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்! அவர்களை எங்களுக்குத் தெரியாது!” என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் உங்களின் சகோதரர்கள். உங்களைச் சார்ந்தவர்கள். நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள். ஆயினும் அவர்கள் தனித்திருக்கும்போது அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள். அவர்களே அக்கூட்டத்தினர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
(இப்னுமாஜா: 4245)حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ بْنِ حَدِيجٍ الْمَعَافِرِيُّ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَنْ أَبِي عَامِرٍ الْأَلْهَانِيِّ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ
«لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا، فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا» ، قَالَ ثَوْبَانُ: يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا، جَلِّهِمْ لَنَا أَنْ لَا نَكُونَ مِنْهُمْ، وَنَحْنُ لَا نَعْلَمُ، قَالَ: «أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ، وَمِنْ جِلْدَتِكُمْ، وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ، وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-4245.
Ibn-Majah-Shamila-4245.
Ibn-Majah-Alamiah-4235.
Ibn-Majah-JawamiulKalim-4243.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . ஈஸா பின் யூனுஸ்
3 . உக்பா பின் அல்கமா
4 . அர்தாத் பின் முன்திர்
5 . அபூஆமிர்-அப்துல்லாஹ் பின் ஃகாபிர்
6 . ஸவ்பான் (ரலி)
ஆய்வின் சுருக்கம்:
இந்தச் செய்தி பலவீனமானது என்பதற்கு சிலர் கூறும் காரணங்கள்:
1 . இந்தச் செய்தி சில குர்ஆன் வசனங்களுக்கும், சில சரியான ஹதீஸ்களுக்கும் முரணாக இருப்பதால் கருத்து சரியில்லை.
குர்ஆன் வசனம்:
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார். (அல்குர்ஆன்: 4:48)
ஹதீஸ்கள்:
பார்க்க: புகாரி-4685, 6069,
மேலும் இதில், ரகசியமாக பாவம் செய்தோருக்கு, இணைவைப்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனையைப் போன்று கிடைக்கும் என்ற கருத்து உள்ளது.
2 . ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஆமிர்-அப்துல்லாஹ் பின் ஃகாபிர் என்பவர் பற்றி ஆரம்பகால அறிஞர்களின் தரச்சான்றிதல் இல்லை. தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் மட்டுமே இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.
3 . அறிவிப்பாளர் உக்பா பின் அல்கமா அவர்களைப் பற்றி, சிலர் பாராட்டியிருந்தாலும் இவரின் மகன் இவரின் ஹதீஸ்களில் மற்றவர்களின் ஹதீஸ்களை இடைச்செருகல் செய்துவிட்டார் என்ற விமர்சனம் உள்ளது.
4 . முக்கிய ஹதீஸ்நூல்களில் இப்னு மாஜா அவர்கள் மட்டுமே இதை (தனித்து) பதிவு செய்துள்ளார்.
(இவற்றில் 2, 4 ஆகிய எண்ணில் உள்ள காரணங்கள் சரியானதல்ல என்றாலும் மற்ற இரண்டு காரணங்களை கவனிக்க வேண்டியுள்ளது)
இதை சரியானது என்று கூறக்கூடியவர்கள் குறிப்பிடும் காரணங்கள்:
1 . உக்பா பின் அல்கமா என்பவர் பற்றிய ஆய்வில் இவர் அறிவிக்கும் சில வகைச் செய்திகள் தான் பலவீனமானவை; சில வகைச் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை. மேற்கண்ட செய்தி ஹஸன் தரத்தில் உள்ள செய்தியாகும்.
2 . மேலும் இதற்கு முரண்படுவது போன்றுள்ள குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் இணைத்து முரண்படாதவாறு விளக்கம் கூறமுடியும்.
- 1 . இந்தச் செய்தி கீழ்க்கண்ட இறைவசனத்தைப் போன்றது.
தமக்குத் தாமே துரோகம் செய்வோருக்காக நீர் வாதிடாதீர்! துரோகம் செய்யும் பாவியை அல்லாஹ் விரும்ப மாட்டான். அவர்கள் மக்களிடம் மறைத்திடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களை இரவில் பேசி அவர்கள் சதி செய்தபோது அவன் அவர்களுடன் இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன்: 4:107-108)
- 2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் புகாரி-6069 இல் உள்ள செய்தி முஸ்லிம்கள் விசயத்தில் கூறப்பட்டதாகும். மேற்கண்ட ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்தி (நபி (ஸல்) காலத்தில் வாழ்ந்த) முனாஃபிகீன்-நயவஞ்சகர்கள் விசயத்தில் கூறப்பட்டதாகும். - 3 . மேலும் அல்லாஹ் தடுத்ததை கூடும் என்று கருதி யார் செய்தாலும் அது பெருங்குற்றமாகும். அவர்களும் இதில் அடங்குவார்கள். ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்தியில் கூறப்பட்டவர்களில் இந்த வகையினரும் அடங்குவார்கள்.
- 4 . இணைவைப்பதால் அமல்கள் அழிந்துவிடுவது போன்று வேறு சில செயல்களாலும் அமல்கள் அழிந்துவிடும் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.
நபியின் குரலுக்கு மேல் சப்தத்தை உயர்த்துவதாலும் அமல்கள் அழிந்துவிடும் என்று அல்லாஹ் எச்சரித்துள்ளான்.
எனவே மேற்கண்ட செய்தியின் கருத்தை தவறானது என்று சொல்வது தவறு.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33109-ஈஸா பின் யூனுஸ் பின் அபான் அல்ஃபாகூரீ, அர்ரம்லீ அவர்கள் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث எனும் தரத்தில் கூறியுள்ளனர். - நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியதாகவும் தகவல் உள்ளது. - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் சில நேரம் தவறாக அறிவிப்பவர் என்று கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரை அறிஞர்கள் பலமானவர் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக் என்றும் இப்னு ஹிப்பானின் கருத்தின்படியும் கூறியுள்ளார். - தஹ்ரீர் நூலாசிரியர்கள், இவரை ஸதூக்-ஹஸனுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும்; இவரிடமிருந்து நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்ற பல பலமானவர்கள் அறிவித்துள்ளனர் என்பதாலும்; அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் தனது பலமான ஆசிரியர்களுக்கு ஸதூக் என்று கூறுவார் என்பதாலும் இவர் பலமானவர்களைப் போன்றவர் என்றும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/292, அஸ்ஸிகாத்-8/495, தஹ்தீபுல் கமால்-23/60, அல்காஷிஃப்-3/584, தாரீகுல் இஸ்லாம்-6/384, ஸியரு அஃலாமின் நுபலா-12/363, தஹ்தீபுத் தஹ்தீப்-3/371, தக்ரீபுத் தஹ்தீப்-1/773, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-9340)
- மேலும் இதில் வரும் ராவீ-28635-உக்பா பின் அல்கமா பின் ஹுதைஜ் அவர்கள் பற்றி அபூமுஸ்ஹிர், இப்னு கிராஷ்,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 283
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், லா பஃஸ பிஹீ என்று கூறியுள்ளார். (இதை இவர் பலமானவர்களுக்கும் கூறுவார்.) - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் அவ்ஸாஈ அவர்களின் மாணவர்களில் (மிகப் பலமானவரான) வலீத் பின் மஸ்யத் என்பவரை விட எனக்கு மிகப் பிரியமானவர் என்று கூறியுள்ளார்.
- இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரின் மகனான முஹம்மத் பின் உக்பா என்பவர் இவரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது. மற்றவர்கள் இவரிடமிருந்து அறிவித்தால் ஏற்கலாம் என்ற கருத்தில் கூறியுள்ளார். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் அவ்ஸாஈ அவர்களிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். (அவை, இவரிடமிருந்து இவரின் மகன் அறிவித்த செய்திகளாக இருந்தாலும் சரி; மற்றவர்கள் அறிவித்த செய்திகளாக இருந்தாலும் சரி எல்லாம் ஒன்றே)
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/314, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/491, அஸ்ஸிகாத்-8/500, தஹ்தீபுல் கமால்-20/211, அல்காஷிஃப்-3/426, தாரீகுல் இஸ்லாம்-5/123, தஹ்தீபுத் தஹ்தீப்-3/125, தக்ரீபுத் தஹ்தீப்-1/684)
- இவரைப் பற்றிய ஆய்வில் இவரின் மகன் இவரிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவையாகும்.
- இவ்வாறே இவர், அவ்ஸாஈ அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் ஆய்வுக்குரியவையாகும்.
- மற்ற வகையான அறிவிப்பாளர்தொடர்கள் ஹஸன் தரத்தில் அமைந்தவையாகும்.
நமது முடிவு:
மேற்கண்ட செய்தி அவ்ஸாயீ அவர்கள் வழியாகவோ அல்லது உக்பா அவர்களின் மகனான முஹம்மத் பின் உக்பா வழியாகவோ வரவில்லை. எனவே இது ஹஸன் தர அறிவிப்பாளர்தொடராகும்.
என்றாலும் இது ஹஸன் தர அறிவிப்பாளர்தொடர் என்பதுடன் குர்ஆனுக்கும், வேறு சில ஹதீஸ்களுக்கும் முரண்படுவதால் இது ஏற்கமுடியாத செய்தியாகும். குறைந்த பட்சம், இந்தச் செய்தியின் கருத்தை பொதுவாக அனைவருக்கும் பொருந்திப் பார்க்க முடியாது.
1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அர்தாத் பின் முன்திர் —> அபூஆமிர் —> ஸவ்பான் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-4245, முஸ்னத் ரூயானீ-651, அல்முஃஜமுல் அவ்ஸத்-4632, அல்முஃஜமுஸ் ஸகீர்-662, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-680, தஹ்தீபுல் கமால்-1707,
- முஸ்னத் ரூயானீ-651.
مسند الروياني (1/ 425)
651 – نا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، نا عِيسَى بْنُ يُونُسَ الرَّمْلِيُّ، نا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَنْ أَبِي عَامِرٍ، عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بَيْضَاءَ فَيَجْعَلُهَا اللَّهُ هَبَاءً مَنْثُورًا» قَالَ ثَوْبَانُ: يَا رَسُولَ اللَّهِ، صِفْهُمْ لَنَا وَجَلِّهِمْ، لَا نَكُونُ مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ، قَالَ: «أَمَا إنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ، وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ، وَلَكِنَّهُمْ قَوْمٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا»
…
- முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-680.
مسند الشاميين للطبراني (1/ 393)
680 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ جَرِيرٍ الصُّورِيُّ، ثنا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدِّمَشْقِيُّ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الصَّنَّامِ الرَّمْلِيُّ، قَالَا: ثنا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ الْبَيْرُوتِيُّ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَنْ أَبِي عَامِرٍ الْأَلْهَانِيِّ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا اللَّهُ هَبَاءً مَنْثُورًا» . قَالَ ثَوْبَانُ: يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا وَجَلِّهِمْ لَا نَكُونُ مِنْهُمْ وَنَحْنُ لَا نَعْلَمُ , قَالَ: «أَمَا إِنَّهُمْ إِخْوَانِكُمْ مِنْ جِلْدَتِكُمْ يَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا»
…
- தஹ்தீபுல் கமால்-1707.
تهذيب الكمال في أسماء الرجال (15/ 418)
1707 – أَخْبَرَنَا أَحْمَد بْن أَبي الخير، قال: أَنْبَأَنَا أَبُو الْقَاسِمِ غَانِمُ بْن مُحَمَّدِ بْن أَبي القاسم الْجَلابُ الأَصْبَهَانِيُّ، قال: أَخْبَرَنَا أَبُو طَاهِرٍ إِسْحَاقُ بْنُ أَحْمَدَ بْنِ جَعْفَرٍ الرَّاشْتِينَانِيُّ، قال: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ رِيذَةَ، قال: أخبرنا أَبُو الْقَاسِمِ الطَّبَرَانِيُّ، قال: حَدَّثَنَا عُبَيد اللَّهِ بْنُ الصَّنَّامِ الرَّمْلِيُّ، قال: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ الفأَخُوري الرَّمْلِيُّ، قال: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ عَلْقَمَةَ، عَنْ أَرْطَاةَ بْنِ الْمُنْذِرِ، عَن أَبِي عَامِرٍ الأَلْهَانِيِّ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، قال: قال رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: لالقين أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ، فَيَجْعَلُهَا اللَّهُ هَبَاءً مَنْثُورًا”فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، صِفْهُمْ لَنَا كي لا نَكُونَ مِنْهُمْ، ونَحْنُ لا نَعْلَمُ؟ فَقَالَ: أَمَا إِنَّهُمْ مِنْ إِخْوَانِكُمْ، ولَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلُوا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا.
قال الطَّبَرَانِيُّ: لا يُرْوَى عَنْ ثَوْبَانَ إِلا بِهَذَا الإِسْنَادِ. تَفَرَّدَ بِهِ عُقْبَةُ.
رَوَاهُ ابْنُ مَاجَهْ عَنْ عِيسَى بْن يُونُس، فوافقناه فيه بعلو ولَيْسَ لَهُ عِنْدَهُ غَيْرُهُ.
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-4685, 6069,
சமீப விமர்சனங்கள்