பாடம் : 4 அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத்துத் தாழிட்டுவிட்டு, வாரும் என்று அழைத்தாள் எனும் (12:23ஆவது) வசனத் தொடர். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹய்த்தலக்க என்பதற்கு ஹவ்ரானியா எனும் (சிரியா) மொழியில் இங்கே வா! என்று பொருள். இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களும், இச்சொல்லின் பொருள் வா! என்பது தான் என்று கூறுகிறார்கள்.
அபூ வாளில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார்.
(திருக்குர்ஆன் 12:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காலத் ஹைத்த லக்க’ எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள்ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்.
(திருக்குர்ஆன் 12:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘மஸ்வாஹு’ எனும் சொல்லுக்கு ‘இவரின் அந்தஸ்து’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 12:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஃபயா’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் இருவரும் கண்டனர்’ என்று பொருள்.
(திருக்குர்ஆன் 37:69 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்ஃபவ் ஆபா அஹும்’ என்பதற்கு ‘அவர்கள் தம் மூதாதையரைக் கண்டார்கள்’ என்று பொருள்.
இப்னு மஸ்ஊத்(ரலி), (திருக்குர்ஆன் 37:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘பல்அஜிப்த்த வ யஸ்கரூன்’ என்பதை) ‘பல் அஜீப்த்து வ யஸ்கரூன்’ (நான் ஆச்சரியப்டுகிறேன்; அவர்களே பரிகசிக்கின்றனர்) என்று ஓதினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி(ஸல்) அவர்கள், இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடு’ என்று (அவர்களுக்கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவிற்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர்; (கடும் பசி, பட்டினியால் கண் பஞ்சடைத்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால் அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். அல்லாஹ் கூறுகிறான்: இனி ஒரு நாளை எதிர்ப்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டு வரும்'(திருக்குர்ஆன் 44:10). மேலும், அல்லாஹ் கூறினான்: நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகிறோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே மீள்கிறீர்கள் (திருக்குர்ஆன் 44:15) இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களைவிட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படபோவதில்லை) ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்த புகையும் வந்துவிட்டது; பத்ருப் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.
Book : 65
(புகாரி: 4692)بَابُ قَوْلِهِ: {وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وَغَلَّقَتِ الأَبْوَابَ، وَقَالَتْ: هَيْتَ لَكَ} [يوسف: 23]
وَقَالَ عِكْرِمَةُ: ” هَيْتَ لَكَ بِالحَوْرَانِيَّةِ: هَلُمَّ ” وَقَالَ ابْنُ جُبَيْرٍ: «تَعَالَهْ»
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا بِشْرُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ
{هَيْتَ لَكَ} [يوسف: 23]. قَالَ: «وَإِنَّمَا نَقْرَؤُهَا كَمَا عُلِّمْنَاهَا» {مَثْوَاهُ} [يوسف: 21]: «مُقَامُهُ». {وَأَلْفَيَا} [يوسف: 25]: «وَجَدَا»، {أَلْفَوْا آبَاءَهُمْ} [الصافات: 69]: «أَلْفَيْنَا» وَعَنِ ابْنِ مَسْعُودٍ: (بَلْ عَجِبْتُ وَيَسْخَرُونَ)
சமீப விமர்சனங்கள்