அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி (ஸல்) அவர்கள், இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடு என்று (அவர்களுக்குக் கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவிற்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர், (கடும் பசி, பட்டினியால் கண்பஞ்சடைந்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால் அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகைபோன்ற ஒன்றையே காண்பார். அல்லாஹ் கூறுகின்றான் – இனி ஒரு நாளை எதிர்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டுவரும் (44-10) . மேலும், அல்லாஹ் கூறுகின்றான்- நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகின்றோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே) மீள்கிறீர்கள். (44-15) இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களை விட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படப்போவதில்லை) ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்தப் புகையும் வந்துவிட்டது, பத்ருப் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.
Book :65
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ قُرَيْشًا لَمَّا أَبْطَئُوا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالإِسْلاَمِ، قَالَ: «اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ» فَأَصَابَتْهُمْ سَنَةٌ حَصَّتْ كُلَّ شَيْءٍ حَتَّى أَكَلُوا العِظَامَ، حَتَّى جَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَى السَّمَاءِ فَيَرَى بَيْنَهُ وَبَيْنَهَا مِثْلَ الدُّخَانِ، قَالَ اللَّهُ: {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} [الدخان: 10]، قَالَ اللَّهُ: {إِنَّا كَاشِفُو العَذَابِ قَلِيلًا إِنَّكُمْ عَائِدُونَ} [الدخان: 15]، أَفَيُكْشَفُ عَنْهُمُ العَذَابُ يَوْمَ القِيَامَةِ؟ وَقَدْ مَضَى الدُّخَانُ، وَمَضَتِ البَطْشَةُ
சமீப விமர்சனங்கள்