தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4694

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 அரசர், அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார். (அரசரின்) தூதுவர் யூசுஃபிடம் வந்த போது,யூசுஃப் அவரிடம் நீர் உம் எஜமானிடம் திரும்பிச் சென்று, தம் கரங்களை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று? என்று கேட்டு வாரும். திண்ணமாக, என் இறைவன் அப் பெண் களின் சூழ்ச்சியை நன்கு அறிந்தவனாவான் என்று கூறினார். பிறகு அரசர் அப்பெண் களிடம் நீங்கள் யூசுஃபை உங்கள் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? என்று வினவினார். அதற்கு அப்பெண்கள், அல்லாஹ் தூய்மையானவன்! நாங்கள் அவரிடம் எத்தகைய தீய அம்சத்தையும் காணவில்லை என்று கூறினர் எனும் (12:50, 51 ஆகிய) வசனங்கள். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஹாஷ மற்றும் ஹாஷா ஆகிய சொற்களுக்கு தூயவன்என்றும் தவிரஎன்றும் (அரபி மொழி வழக்கில்) பொருள். ஹஸ்ஹஸ எனும் சொல்லுக்குத் தெளிவாகிவிட்டது என்று பொருள்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இறைத்தூதர்) ‘லூத்’ (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’ என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்’ என்று பதிலளித்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 65

(புகாரி: 4694)

بَابُ قَوْلِهِ: {فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عَلِيمٌ قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَاوَدْتُنَّ يُوسُفَ عَنْ نَفْسِهِ قُلْنَ حَاشَ لِلَّهِ} [يوسف: 51]

وَحَاشَ وَحَاشَى: تَنْزِيهٌ وَاسْتِثْنَاءٌ، {حَصْحَصَ} [يوسف: 51]: وَضَحَ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ القَاسِمِ، عَنْ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الحَارِثِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

يَرْحَمُ اللَّهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ، وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ لَأَجَبْتُ الدَّاعِيَ، وَنَحْنُ أَحَقُّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ لَهُ: {أَوَلَمْ تُؤْمِنْ، قَالَ: بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي} [البقرة: 260]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.