தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4700

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 அல்லாஹ்வின் அருட்கொடையை (அடைந்த பின் அதனை) நன்றிகொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தங்கள் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் (நரகில்) தள்ளியவர்களை நீர் பார்க்க வில்லையா? (எனும் 14:28ஆவது இறை வசனம்.) (இவ்வசனத்திலுள்ள) நீர் பார்க்க வில்லையா? (அலம் தர) எனும் சொற்றொட ருக்கு நீர் அறியவில்லையா? என்று பொருள். அலம் தர கைஃப (14:24; 89:6; 105:1) மற்றும் அலம் தர இலல்லஃதீன கரஜூ (2:243) ஆகிய வசனங்களிலும் இதே பொருள்தான். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) அல்பவார் எனும் சொல்லுக்கு அழிவு என்று பொருள். (25:18; 48:12ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ள) கவ்மன் பூரா என்பதன் பொருள் அழிந்து விடும் சமுதாயம்என்பதாகும்.

 அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்.

‘அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்கால் மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா?’ எனும் (திருக்குர்ஆன் 14:28 வது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்து இறைமறுப்பாளர்களைக் குறிக்கிறது’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

Book : 65

(புகாரி: 4700)

بَابُ {أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْرًا} [إبراهيم: 28]

أَلَمْ تَرَ: أَلَمْ تَعْلَمْ؟ كَقَوْلِهِ: {أَلَمْ تَرَ كَيْفَ} [إبراهيم: 24]، {أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ خَرَجُوا} [البقرة: 243]، {البَوَارُ} [إبراهيم: 28]: الهَلاَكُ، بَارَ يَبُورُ، {قَوْمًا بُورًا} [الفرقان: 18]: هَالِكِينَ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ

{أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَةَ اللَّهِ كُفْرًا} [إبراهيم: 28] قَالَ: «هُمْ كُفَّارُ أَهْلِ مَكَّةَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.