தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4705

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள் எனும் (15:91ஆவது) இறைவசனம். (15:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முக்தஸிமீன் எனும் சொல்லுக்குச் சத்தியம் செய்தவர்கள்என்று பொருள்.5 இதே இனத்தில் உள்ளது தான் (90:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா உக்ஸிமுஎனும் சொல்லும். இதற்குச் சத்தியம் செய்கிறேன் என்று பொருள். இதனை ல உக்ஸிமு (உறுதி யாக சத்தியம் செய்கிறேன்) எனவும் ஓதலாம். (7:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) காஸமஹுமா எனும் சொல்லுக்கு, (ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவரிடமும் ஷைத்தான் சத்தியம் செய்தான். ஆனால், அவ்விருவரும் அவனிடம் சத்தியம் செய்யவில்லை என்று பொருள்.6 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (27:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தகாஸமூ எனும் சொல்லுக்கு ஒருவருக் கொருவர் சத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று பொருள்.

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

‘அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 15:91 வது) வசனம் வேதக்காரர்களைக் குறிக்கிறது. அவர்கள் (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாகப் பிரித்துக்கொண்டு, அதில் (தமக்கு இசைவான) சிலவற்றை நம்பி ஏற்றார்கள். (இசைவில்லாத) சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

என ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

Book : 65

(புகாரி: 4705)

بَابُ قَوْلِهِ: {الَّذِينَ جَعَلُوا القُرْآنَ عِضِينَ} [الحجر: 91]

{المُقْتَسِمِينَ} [الحجر: 90]: «الَّذِينَ حَلَفُوا، وَمِنْهُ» {لاَ أُقْسِمُ} [القيامة: 1]: «أَيْ أُقْسِمُ، وَتُقْرَأُ» (لَأُقْسِمُ)، {وَقَاسَمَهُمَا} [الأعراف: 21]: «حَلَفَ لَهُمَا وَلَمْ يَحْلِفَا لَهُ» وَقَالَ مُجَاهِدٌ: {تَقَاسَمُوا} [النمل: 49]: «تَحَالَفُوا»

حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

{الَّذِينَ جَعَلُوا القُرْآنَ عِضِينَ} [الحجر: 91] قَالَ: «هُمْ أَهْلُ الكِتَابِ جَزَّءُوهُ أَجْزَاءً، فَآمَنُوا بِبَعْضِهِ وَكَفَرُوا بِبَعْضِهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.