தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4711

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 (17:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கர்ரம்னா எனும் சொல்லும் (இதே வகையிலான) அக்ரம்னாஎனும் சொல்லும் (கண்ணியப்படுத்தினோம் என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும். (17:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ளிஉஃபல் ஹயாத்தி வ ளிஉஃபல் மமாத்தி எனும் சொற்றொடருக்கு உலக வாழ்விலும் இரு மடங்கு வேதனை, மரணத்திற்குப் பின்பும் இரு மடங்கு வேதனை என்று பொருள். (17:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃகிலாஃபக்க எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறைப்படியான) கல்ஃபக்க எனும் சொல்லும் (உமக்குப் பின்னர் எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். (17:83ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நஆ எனும் சொல்லுக்கு ஒதுங்கிக் கொண்டான் என்று பொருள். (17:84ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷாகிலத்திஹி எனும் சொல்லுக்குத் தன் தரப்பில் என்று பொருள். இச்சொல் ஷக்ல் (நிகர்) எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். (17:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸர்ரஃப்னா எனும் சொல்லுக்கு முன் வைத்துள்ளோம் என்று பொருள். (17:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கபீல் எனும் சொல்லுக்கு நேரடியாக; கண்ணெதிரே என்று பொருள். (இச்சொல்லிலிருந்து பிறந்ததே) அல்காபிலா (பிரசவப் பெண் மருத்துவர்) எனும் சொல்லும். ஏனெனில், இந்தப் பெண் மருத்துவர், பிரசவிக்கும் பெண்ணுக்கெதிரில் இருந்து அவளுடைய குழந்தையை எதிர்நோக்கு கின்றார். (17:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கஷ்யத்தல் இன்ஃபாக் எனும் சொல்லுக்குச் செலவாகிவிடுமோ என்ற அச்சம் என்று பொருள். இன்ஃபாக் என்பதற்கு வறுமை என்றும், நஃபிக என்பதற்குப் போய்விட்டதுஎன்றும் பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) கத்தூர் எனும் சொல்லுக்குக் கஞ்சன் என்று பொருள். (17:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அஃத்கான் எனும் சொல்லுக்கு முகத் தாடைகள் இரண்டும் இணையுமிடங்கள் (முகவாய்கள்) என்று பொருள். இதன் ஒருமை ஃதகன் என்பதாகும். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (17:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மவ்ஃபூர் (நிறைவாக்கப்பட்டது) எனும் (செயப்பாட்டு எச்சவினைப் பெயர்ச்) சொல்லுக்கு (வினையாலணையும் பெயரான) வாஃபிர் (நிறைவானது) என்பதன் பொருளாகும். (17:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) தபீஉன் எனும் சொல்லுக்குப் பழிவாங்குப வன் என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உதவியாளர் எனப் பொருள் கொள்கிறார்கள். (இதற்குக் குற்றம் சாட்டு வோர், விசாரணை செய்யக்கூடியவர் என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.) (17:97ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) கபத் எனும் சொல்லுக்குத் தணிந்தது என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (17:26ஆவது வசனத்திலுள்ள) வீண் செலவு செய்ய வேண்டாம் என்பதன் கருத்தாவது: (மார்க்கம் அனுமதிக்காத) தீய வழியில் செலவு செய்யவேண்டாம். (17:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ரஹ்மத் (அருள்) எனும் சொல், (வாழ்க்கைக்குத் தேவைப்படும்) வாழ்வாதாரத்தைக் குறிக்கும். (17:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மஸ்பூர் எனும் சொல்லுக்கு சபிக்கப்பட்ட வன் என்று பொருள். (17:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா தக்ஃபு எனும் சொல்லுக்குப் பேசாதீர்கள் என்று பொருள். (17:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃப ஜாஸு எனும் சொல்லுக்குத் திட்ட மிட்டனர் என்று பொருள். (17:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யுஸ்ஜீ எனும் சொல்லுக்குச் செலுத்து கின்றான் என்று பொருள். (17:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்அஃத்கான் எனும் சொல்லுக்கு முகங்கள் என்று பொருள். பாடம் (அக்கிரமக்காரர்கள் வாழ்கின்ற) ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க விரும்பினால், அங்கு சொகுசாக வாழ்வோருக்கு நாம் கட்டளையிடுகின்றோம்; அதில் அவர்கள் பாவம் இழைக்கின்றார்கள். அதையடுத்து அவ்வூரின் மீது நமது ஆணை உறுதியாகி, அதனை நாம் அடியோடு அழித்து விடுகின் றோம் எனும் (17:16ஆவது) இறைவசனம்.

 அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

அறியாமைக் காலத்தில், ஒரு குலத்தாரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், ‘அமிர பனூ ஃபுலான்’ (இன்ன குலத்தார் எண்ணிக்கையில் பெருகிவிட்டார்கள்) என்று கூறிவந்தோம்.

மற்றோர் அறிவிப்பில் ‘(அமிர என்பதற்கு பதிலாக) ‘அமர’ என்று காணப்படுகிறது.

Book : 65

(புகாரி: 4711)

بَابُ قَوْلِهِ تَعَالَى: {وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ} [الإسراء: 70]

كَرَّمْنَا وَأَكْرَمْنَا وَاحِدٌ»، {ضِعْفَ الحَيَاةِ} [الإسراء: 75]: «عَذَابَ الحَيَاةِ»، {وَضِعْفَ المَمَاتِ} [الإسراء: 75]: «عَذَابَ المَمَاتِ»، {خِلاَفَكَ} [الإسراء: 76]: «وَخَلْفَكَ سَوَاءٌ»، {وَنَأَى} [الإسراء: 83]: «تَبَاعَدَ»، {شَاكِلَتِهِ} [الإسراء: 84]: «نَاحِيَتِهِ، وَهِيَ مِنْ شَكْلِهِ»، {صَرَّفْنَا} [الإسراء: 41]: «وَجَّهْنَا»، {قَبِيلًا} [الإسراء: 92]: ” مُعَايَنَةً وَمُقَابَلَةً، وَقِيلَ: القَابِلَةُ لِأَنَّهَا [ص:84] مُقَابِلَتُهَا وَتَقْبَلُ وَلَدَهَا “، {خَشْيَةَ الإِنْفَاقِ} [الإسراء: 100]: ” أَنْفَقَ الرَّجُلُ: أَمْلَقَ، وَنَفِقَ الشَّيْءُ ذَهَبَ “، {قَتُورًا} [الإسراء: 100]: «مُقَتِّرًا»، {لِلْأَذْقَانِ} [الإسراء: 107]: «مُجْتَمَعُ اللَّحْيَيْنِ وَالوَاحِدُ ذَقَنٌ» وَقَالَ مُجَاهِدٌ: {مَوْفُورًا} [الإسراء: 63]: «وَافِرًا»، {تَبِيعًا} [الإسراء: 69]: «ثَائِرًا» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: «نَصِيرًا»، {خَبَتْ} [الإسراء: 97]: «طَفِئَتْ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {لاَ تُبَذِّرْ} [الإسراء: 26]: «لاَ تُنْفِقْ فِي البَاطِلِ»، {ابْتِغَاءَ رَحْمَةٍ} [الإسراء: 28]: «رِزْقٍ»، {مَثْبُورًا} [الإسراء: 102]: «مَلْعُونًا»، {لاَ تَقْفُ} [الإسراء: 36]: «لاَ تَقُلْ»، {فَجَاسُوا} [الإسراء: 5]: ” تَيَمَّمُوا، يُزْجِي الفُلْكَ يُجْرِي الفُلْكَ، {يَخِرُّونَ لِلْأَذْقَانِ} [الإسراء: 107]: «لِلْوُجُوهِ»

بَابُ قَوْلِهِ: {وَإِذَا أَرَدْنَا أَنْ نُهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا} [الإسراء: 16] الآيَةَ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا مَنْصُورٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ

كُنَّا نَقُولُ لِلْحَيِّ إِذَا كَثُرُوا فِي الجَاهِلِيَّةِ: أَمِرَ بَنُو فُلاَنٍ ” حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ وَقَالَ: «أَمَرَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.