தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4727

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

அவ்விருவரும் (அவ்விடத்தைக்) கடந்து சென்றபோது மூசா தம் பணியாளரிடம் நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம் என்று கூறினார். அதற்குப் பணியாளர் நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா?அங்குதான் நான் மீனை மறந்து(தவறவிட்டு)விட்டேன் என்று சொன்னார் எனும் (18:62, 63 ஆகிய) இறை வசனங்கள்.

(18:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுன்உ எனும் சொல்லுக்குச் செயல் என்று பொருள்.

(18:108ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஹிவல் எனும் சொல்லுக்குத் திரும்புதல் என்று பொருள்.

(18:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இம்ர் எனும் சொல்லுக்கும் (18:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) நுக்ர் எனும் சொல்லுக்கும் அதிர்ச்சியளிப்பது என்று பொருள்.

(18:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) யன்கள்ள எனும் சொல்லும், யன்காளு எனும் சொல்லும் (விழுந்து விடுகின்ற நிலையில் உள்ளது எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். யன்காளுஸ் ஸின்னு (பல் விழப்போகிறது) என்பதைப் போல.

இதே வசனத்தின் மூலத்திலுள்ள) லத்தக்கஃத்த எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள) ல தகிஃத்த எனும் சொல்லும் (பெறுதல் எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(18:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ருஹ்ம் (அதிக பாசமிக்கவர்) எனும் சொல் ரஹ்மத் (அன்பு) எனும் சொல்லைவிட மிகையான பொருளைக் கொண்டதாகும். இது ரஹீம் (நிகரிலா அன்புடையோன்) எனும் சொல்லிலிருந்து வந்தது எனவும் கருதப்படுகிறது. இறையருள் பொழிவதால் மக்கா நகர் உம்மு ருஹ்ம் (அருளின் அன்னை) என அழைக்கப்படுவதுண்டு.

 ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘இறைத்தூதரான மூஸா(அலை) அவர்கள், களிரைச் சந்தித்த மூஸா(அலை) அல்லர்(; அவர் வேறொரு மூஸா) என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பிகாலி கூறுகிறார்’ என்றேன்.

அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), ‘அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை இப்னு கஅப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்தார்கள்:

(ஒருமுறை) மூஸா(அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘மக்களில் மிகவும் அறிந்தவர் யார்?’ என்று வினவப்பட்டது. அதற்கு மூஸா (அலை) அவர்கள், ‘நானே’ என்று பதிலளித்துவிட்டார்கள்.

எனவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூஸா(அலை) அவர்கள் ‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு’ என்று சொல்லாமல்விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு, ‘இல்லை; இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்’ என்று அறிவித்தான்.

அதற்கு அல்லாஹ், ‘நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார். அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்’ என்று சொன்னான்.

எனவே, மூஸா(அலை) அவர்கள் தம் உதவியாளர் ‘ஒஷஉ இப்னு நூனுடன்’ அந்த மீன் சம்தமாகப் புறப்பட்டு (இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்து அதனருகில் ஓய்வெடுத்தனர். உடனே மூஸா(அலை) அவர்கள் தம் தலையை வைத்து (படுத்து) உறங்கியும்விட்டார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், ‘மேலும் அந்தப் பாறைக்கடியில் ஒரு நீருற்று இருந்தது. அதற்கு ‘ஜீவ நீருற்று’ எனப்படும். அதன் நீர் பட்ட எந்தப் பொருளும் உயிர் பெறாமல் இருக்காது. அவ்வாறே அந்த மீனின் மீதும் அந்த ஊற்றின் நீர்பட்டது’ என்று காணப்படுகிறது.

உடனே, அந்த மீன் (உயிர் பெற்று) அசைந்து, கூடையிலிருந்து நழுவி கடலுக்குள் புகுந்தது.

மூஸா(அலை) அவர்கள் கண் விழித்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா! நாம் நம்முடைய இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்’ என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 18:62)

தமக்குக் கட்டளையிடப்பட்ட (இடத்)தைத் தாண்டிச் செல்லும்வரை மூஸா(அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.

உதவியாளர் ஒஷஉ இப்னு நூன் மூஸா(அலை) அவர்களிடம், ‘நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக் கொண்டது’ என்று கூறினார். அதற்கு மூஸா, ‘நாம் தேடி வந்த இடம் அதுதான்’ என்று கூறினார். (திருக்குர்ஆன் 18:63, 64)

எனவே, அவர்களிருவரும் தங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். (மீன் நழுவிய பாறைக்கு அருகிலிருந்த கடற்பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது) மீன் (நீந்திச்) சென்ற இடத்தில் (இருந்த தண்ணீர்) வளையம் போலிருக்கக் கண்டனர்.

மூஸா(அலை) அவர்களின் உதவியாளருக்கு அது வியப்பாகவும், மீனுக்கு அது (தப்பும்) வழியாகவும் இருந்தது.

அவர்கள் இருவரும் அந்தப் பாறைக்குப் போய்ச் சேர்ந்தபோது அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் (போர்த்தி) மூடிக் கொண்டபடி ஒருவர் (களிர்) இருந்தார். மூஸா(அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் ‘உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?’ என்று வினவினார்…………..

Book : 65

(புகாரி: 4727)

بَابُ {فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ: آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا، قَالَ: أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ} [الكهف: 63]

إِلَى قَوْلِهِ {عَجَبًا} [يونس: 2]، {صُنْعًا} [الكهف: 104]: «عَمَلًا»، {حِوَلًا} [الكهف: 108]: «تَحَوُّلًا» {قَالَ: ذَلِكَ مَا كُنَّا نَبْغِ، فَارْتَدَّا عَلَى آثَارِهِمَا قَصَصًا} [الكهف: 64]، {إِمْرًا} [الكهف: 71] وَ {نُكْرًا} [الكهف: 74]: «دَاهِيَةً»، {يَنْقَضَّ} [الكهف: 77]: «يَنْقَاضُ كَمَا تَنْقَاضُ السِّنُّ»، (لَتَخِذْتَ): «وَاتَّخَذْتَ وَاحِدٌ»، {رُحْمًا} [الكهف: 81]: «مِنَ الرُّحْمِ، وَهِيَ أَشَدُّ مُبَالَغَةً مِنَ الرَّحْمَةِ، وَنَظُنُّ أَنَّهُ مِنَ الرَّحِيمِ، وَتُدْعَى مَكَّةُ أُمَّ رُحْمٍ أَيِ الرَّحْمَةُ تَنْزِلُ بِهَا»

حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنِي سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ

قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّ نَوْفًا البَكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى بَنِي إِسْرَائِيلَ لَيْسَ بِمُوسَى الخَضِرِ، فَقَالَ: كَذَبَ عَدُوُّ اللَّهِ، حَدَّثَنَا أُبَيُّ بْنُ كَعْبٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” قَامَ مُوسَى خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَقِيلَ لَهُ: [ص:92] أَيُّ النَّاسِ أَعْلَمُ؟ قَالَ: أَنَا، فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ إِذْ لَمْ يَرُدَّ العِلْمَ إِلَيْهِ، وَأَوْحَى إِلَيْهِ: بَلَى عَبْدٌ مِنْ عِبَادِي بِمَجْمَعِ البَحْرَيْنِ، هُوَ أَعْلَمُ مِنْكَ، قَالَ: أَيْ رَبِّ، كَيْفَ السَّبِيلُ إِلَيْهِ؟ قَالَ: تَأْخُذُ حُوتًا فِي مِكْتَلٍ، فَحَيْثُمَا فَقَدْتَ الحُوتَ فَاتَّبِعْهُ، قَالَ: فَخَرَجَ مُوسَى وَمَعَهُ فَتَاهُ يُوشَعُ بْنُ نُونٍ، وَمَعَهُمَا الحُوتُ حَتَّى انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، فَنَزَلاَ عِنْدَهَا، قَالَ: فَوَضَعَ مُوسَى رَأْسَهُ فَنَامَ، – قَالَ سُفْيَانُ: وَفِي حَدِيثِ غَيْرِ عَمْرٍو، قَالَ: وَفِي أَصْلِ الصَّخْرَةِ عَيْنٌ يُقَالُ لَهَا: الحَيَاةُ لاَ يُصِيبُ مِنْ مَائِهَا شَيْءٌ إِلَّا حَيِيَ، فَأَصَابَ الحُوتَ مِنْ مَاءِ تِلْكَ العَيْنِ – قَالَ: فَتَحَرَّكَ وَانْسَلَّ مِنَ المِكْتَلِ، فَدَخَلَ البَحْرَ فَلَمَّا اسْتَيْقَظَ مُوسَى قَالَ لِفَتَاهُ: {آتِنَا غَدَاءَنَا} [الكهف: 62] الآيَةَ، قَالَ: وَلَمْ يَجِدِ النَّصَبَ حَتَّى جَاوَزَ مَا أُمِرَ بِهِ، قَالَ لَهُ فَتَاهُ يُوشَعُ بْنُ نُونٍ: {أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ} [الكهف: 63] الآيَةَ، قَالَ: فَرَجَعَا يَقُصَّانِ فِي آثَارِهِمَا، فَوَجَدَا فِي البَحْرِ كَالطَّاقِ مَمَرَّ الحُوتِ، فَكَانَ لِفَتَاهُ عَجَبًا، وَلِلْحُوتِ سَرَبًا،

 

قَالَ: فَلَمَّا انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، إِذْ هُمَا بِرَجُلٍ مُسَجًّى بِثَوْبٍ، فَسَلَّمَ عَلَيْهِ مُوسَى، قَالَ: وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ، فَقَالَ: أَنَا مُوسَى، قَالَ: مُوسَى بَنِي إِسْرَائِيلَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا؟ قَالَ لَهُ الخَضِرُ: يَا مُوسَى، إِنَّكَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ، وَأَنَا عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ اللَّهُ لاَ تَعْلَمُهُ، قَالَ: بَلْ أَتَّبِعُكَ، قَالَ: فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَيْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى السَّاحِلِ فَمَرَّتْ بِهِمْ سَفِينَةٌ فَعُرِفَ الخَضِرُ فَحَمَلُوهُمْ فِي سَفِينَتِهِمْ بِغَيْرِ نَوْلٍ – يَقُولُ بِغَيْرِ أَجْرٍ – فَرَكِبَا السَّفِينَةَ، قَالَ: وَوَقَعَ عُصْفُورٌ عَلَى حَرْفِ السَّفِينَةِ فَغَمَسَ مِنْقَارَهُ فِي البَحْرِ، فَقَالَ الخَضِرُ لِمُوسَى: مَا عِلْمُكَ وَعِلْمِي وَعِلْمُ الخَلاَئِقِ فِي عِلْمِ اللَّهِ إِلَّا مِقْدَارُ مَا غَمَسَ هَذَا العُصْفُورُ مِنْقَارَهُ، قَالَ: فَلَمْ يَفْجَأْ مُوسَى إِذْ عَمَدَ الخَضِرُ إِلَى قَدُومٍ فَخَرَقَ السَّفِينَةَ، فَقَالَ لَهُ مُوسَى: قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا لِتُغْرِقَ أَهْلَهَا {لَقَدْ جِئْتَ} [الكهف: 71] الآيَةَ، فَانْطَلَقَا إِذَا هُمَا بِغُلاَمٍ يَلْعَبُ مَعَ الغِلْمَانِ، فَأَخَذَ الخَضِرُ بِرَأْسِهِ فَقَطَعَهُ، قَالَ لَهُ مُوسَى: {أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ، لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِي صَبْرًا} [الكهف: 75] إِلَى قَوْلِهِ {فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ} [الكهف: 77]- فَقَالَ بِيَدِهِ: هَكَذَا – فَأَقَامَهُ، فَقَالَ لَهُ مُوسَى: إِنَّا دَخَلْنَا هَذِهِ القَرْيَةَ فَلَمْ يُضَيِّفُونَا وَلَمْ يُطْعِمُونَا، {لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا، قَالَ: هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ، سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا} [الكهف: 77]، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَدِدْنَا أَنَّ مُوسَى صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا ” قَالَ: وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقْرَأُ: «وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ [ص:93] غَصْبًا، وَأَمَّا الغُلاَمُ فَكَانَ كَافِرًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.