தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4739

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா ஆகிய அத்தியாயங்கள் அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் அடங்கும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் உள்ளவையாகும். 2

கத்தாதா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:58 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுஃதாதன்’ எனும் சொல்லுக்குத் ‘துண்டு துண்டாக்கினார்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலக்’ எனும் சொல்லி(ன் விளக்கவுரையி)ல் ஹஸன் அல்பஸரீ(ரஹ்) ‘நூற்பு இயந்திரத்தின் தகளி போல் (சுழன்றபடி கோள்கள் அனைத்தும் அதன்னுடையன் நீள்வட்டப்பாதையில் நீந்திச் செல்கின்றன)’ என்று கூறினார்கள். ‘யஸ்பஹ_ன்’ எனும் சொல்லுக்குச் ‘சுற்றுகின்றன’ என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:78 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஃபஷத்’ எனும் சொல்லுக்கு ‘மேய்ந்தது’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:43 வது வசனத்தின் மூலத்திலள்ள ‘வலா ஹும் மின்னா) யுஸ்ஹபூன்’ எனும் சொல்லுக்கு ‘(எம்முடைய வேதனையிலிருந்து) அவர்கள் தடுக்கப்படமாட்டார்கள்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:92 வது வசனத்திலுள்ள) ‘நீங்கள் யாவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே’ என்பதற்கு ‘நீங்கள் யாவரும் ஒரே மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே’ என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:98 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹஸப்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘விறகு’ என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 21:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹஸ்ஸ_’ (உணர்ந்தனர்) எனும் சொல்லுக்கு ‘அதை எதிர்பார்த்தனர்’ என்று பொருள். இச்சொல் ‘அஹஸஸ்த்து (இஹ்ஸாஸன்)’ எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். (இதற்கு ‘ஐம்புலன்களால் உணர்ந்தேன்’ என்று பொருள்.)

(திருக்குர்ஆன் 21:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காமிதீன்’ எனும் சொல்லுக்கு ‘அணைந்து போனவர்கள்’ என்று பொருள். ‘ஹஸீத்’ எனும் சொல்லுக்கு ‘வேரோடு அறுவடை செய்யப்பட்டது’ என்று பொருள். ‘ஹஸீத்’ எனும் சொல்லுக்கு ‘வேரோடு அறுவடை செய்யப்பட்டது’ என்று பொருள். இச்சொல்லே ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூன்று நிலைகளுக்கும் பொருந்தும்.

(திருக்குர்ஆன் 21:19 வது வசனத்திலுள்ள) ‘அவர்கள் சோர்வடையமாட்டார்கள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘லா யஸ்தஸ்ஹிரூன்’ எனும் சொல்லுக்குரியதாகும். ‘ஹஸீர்’ (சோர்வடைந்தவன்), ‘ஹஸர்த்து பஈரீ’ (என் ஒட்டகத்தைக் களைப்படையச் செய்தேன்) ஆகிய சொற்கள் இதில் அடங்கும்.

(அடுத்த அத்தியாயத்தில் வரும் 22;27 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அமீக்’ எனும் சொல்லுக்குத் ‘தொலைவு’ என்று பொருள்.

Book : 65

(புகாரி: 4739)

سُورَةُ الأَنْبِيَاءِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ

بَنِي إِسْرَائِيلَ، وَالكَهْفُ، وَمَرْيَمُ، وَطه، وَالأَنْبِيَاءُ: هُنَّ مِنَ العِتَاقِ الأُوَلِ، وَهُنَّ مِنْ تِلاَدِي، وَقَالَ قَتَادَةُ: {جُذَاذًا} [الأنبياء: 58]: «قَطَّعَهُنَّ» وَقَالَ الحَسَنُ: {فِي فَلَكٍ} [يس: 40]: «مِثْلِ فَلْكَةِ المِغْزَلِ»، {يَسْبَحُونَ} [يس: 40]: «يَدُورُونَ» قَالَ ابْنُ عَبَّاسٍ: {نَفَشَتْ} [الأنبياء: 78]: «رَعَتْ لَيْلًا»، {يُصْحَبُونَ} [الأنبياء: 43]: «يُمْنَعُونَ»، {أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً} [الأنبياء: 92]: ” قَالَ: دِينُكُمْ دِينٌ وَاحِدٌ ” وَقَالَ عِكْرِمَةُ: {حَصَبُ} [الأنبياء: 98]: «حَطَبُ [ص:97] بِالحَبَشِيَّةِ» وَقَالَ غَيْرُهُ: {أَحَسُّوا} [الأنبياء: 12]: «تَوَقَّعُوا مِنْ أَحْسَسْتُ»، {خَامِدِينَ} [الأنبياء: 15]: «هَامِدِينَ»، {وَالحَصِيدُ}: «مُسْتَأْصَلٌ، يَقَعُ عَلَى الوَاحِدِ وَالِاثْنَيْنِ وَالجَمِيعِ»، {لاَ يَسْتَحْسِرُونَ} [الأنبياء: 19]: ” لاَ يُعْيُونَ، وَمِنْهُ {حَسِيرٌ} [الملك: 4]: وَحَسَرْتُ بَعِيرِي “، {عَمِيقٌ} [الحج: 27]: «بَعِيدٌ»، {نُكِسُوا} [الأنبياء: 65]: «رُدُّوا»، {صَنْعَةَ لَبُوسٍ} [الأنبياء: 80]: «الدُّرُوعُ»، {تَقَطَّعُوا أَمْرَهُمْ} [الأنبياء: 93]: «اخْتَلَفُوا، الحَسِيسُ وَالحِسُّ، وَالجَرْسُ وَالهَمْسُ وَاحِدٌ، وَهُوَ مِنَ الصَّوْتِ الخَفِيِّ»، {آذَنَّاكَ} [فصلت: 47]: «أَعْلَمْنَاكَ»، {آذَنْتُكُمْ} [الأنبياء: 109]: «إِذَا أَعْلَمْتَهُ، فَأَنْتَ وَهُوَ عَلَى سَوَاءٍ لَمْ تَغْدِرْ» وَقَالَ مُجَاهِدٌ: {لَعَلَّكُمْ تُسْأَلُونَ} [الأنبياء: 13]: «تُفْهَمُونَ»، {ارْتَضَى} [الأنبياء: 28]: «رَضِيَ»، {التَّمَاثِيلُ} [الأنبياء: 52]: «الأَصْنَامُ»، {السِّجِلُّ} [الأنبياء: 104]: «الصَّحِيفَةُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.