பாடம் : 2 மேலும், மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் விளிம்பில் நின்று கொண்டு அல்லாஹ்வை வழிபடுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மன நிறைவுகொள்கின் றார்கள். துன்பம் ஏற்படுமாயின் தலைகீழாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள்; மறுமையையும் இழந்து விட்டார்கள். இது தான் பகிரங்க மான நஷ்டமாகும் (எனும் 22:11, 12 ஆகிய இறைவசனங்கள்). (முதல் வசனத்தின் மூலத்திலுள்ள) ஹர்ஃப் (விளிம்பு) என்பதற்குச் சந்தேகம் என்பது நோக்கப் பொருளாகும். (அடுத்த அத்தியாயத்தில் 23:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அத்ரஃப்னாஹும் என்பதற்கு ஆடம்பரமான வாழ்க்கையை அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம் என்று பொருள்.
ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.
‘விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகிற சிலரும் மக்களிடையே உள்ளனர்’ எனும் (திருக்குர்ஆன் 22:11 வது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகையில், ‘சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர்களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, ‘இது (-இஸ்லாம்-) நல்ல மார்க்கம்’ என்று கூறுவார்கள். அவர்களின் மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டியிடவில்லையென்றால், ‘இது கெட்ட மார்க்கம்’ என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது)’ என்று கூறினார்கள்.
Book : 65
(புகாரி: 4742)بَابُ {وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ} [الحج: 11]: شَكٍّ، {فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ، وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَى وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالآخِرَةَ} [الحج: 11]
إِلَى قَوْلِهِ: {ذَلِكَ هُوَ الضَّلاَلُ البَعِيدُ} [إبراهيم: 18]، {أَتْرَفْنَاهُمْ} [المؤمنون: 33]: «وَسَّعْنَاهُمْ»
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
{وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ} [الحج: 11] قَالَ: ” كَانَ الرَّجُلُ يَقْدَمُ المَدِينَةَ، فَإِنْ وَلَدَتِ امْرَأَتُهُ غُلاَمًا، وَنُتِجَتْ خَيْلُهُ، قَالَ: هَذَا دِينٌ صَالِحٌ، وَإِنْ لَمْ تَلِدِ امْرَأَتُهُ وَلَمْ تُنْتَجْ خَيْلُهُ، قَالَ: هَذَا دِينُ سُوءٍ
சமீப விமர்சனங்கள்