பாடம் : 5 அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம். அதை உங்களுக்குத் தீங்காகக் கருதாதீர்கள். அது உங்களுக்கு நன்மையானதே! (அவதூறு கற்பித்த) அவர்களில் ஒவ்வொருவருக்கும், அவர் சம்பாதித்த பாவம் உண்டு. அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு எனும் (24:11ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள இஃப்க் எனும் சொல்லின் மிகைச் சொல்லான) அஃப்பாக்எனும் சொல்லுக்கு மகா பொய்யன் (பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவன்) என்று பொருள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
‘அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு’ எனும் (திருக்குர்ஆன் 24:11 வது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) ‘அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்’ என்பானைக் குறிக்கிறது.
Book : 65
(புகாரி: 4749)بابُ (إِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ لَاَ تَحْسِبُوهُ شَرًّا لَكُمْ بَلْ هُوَ خَيْرٌ لَكُمْ لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ مَا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ)
{أَفَّاكٌ} [الشعراء: 222]: «كَذَّابٌ»
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
{وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ} [النور: 11] قَالَتْ: «عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ»
சமீப விமர்சனங்கள்