பாடம் : 10 நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் இனி ஒரு போதும் இதுபோன்ற தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான் எனும் (24:17ஆவது) இறைவசனம்.
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் ‘(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறிர்கள்?’ என்று கேட்டேன். ஆயிஷா(ரலி) ‘அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா?’ என்று கூறினார்கள். ‘ஹஸ்ஸான்(ரலி) (கடைசி காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள்’ என சுஃப்யான்(ரஹ்) கூறினார்.
‘நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்’ என்று ஹஸ்ஸான்(ரலி) (ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள்’ என சுஃப்யான்(ரஹ்) கூறினார்.
‘நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்’ என்று ஹஸ்ஸழன்(ரலி) (ஆயிஷா(ரலி) அவர்களைக் குறித்து கவிதை) பாடினார்கள். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி), ‘ஆனால், நீங்கள் அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தாம் நீங்கள்)’ என்று கூறினார்கள்.
Book : 65
(புகாரி: 4755)بَابُ {يَعِظُكُمُ اللَّهُ أَنْ تَعُودُوا لِمِثْلِهِ أَبَدًا} [النور: 17]
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
جَاءَ حَسَّانُ بْنُ ثَابِتٍ يَسْتَأْذِنُ عَلَيْهَا، قُلْتُ: أَتَأْذَنِينَ لِهَذَا؟ قَالَتْ: «أَوَلَيْسَ قَدْ أَصَابَهُ عَذَابٌ عَظِيمٌ» – قَالَ سُفْيَانُ: تَعْنِي ذَهَابَ بَصَرِهِ – فَقَالَ: حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الغَوَافِلِ قَالَتْ: «لَكِنْ أَنْتَ»
சமீப விமர்சனங்கள்