பாடம் : 5 அதன் வேதனை உங்களைப் பிடித்தே தீரும்! (எனும் 25:77ஆவது வசனத் தொடர்.) (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) -ஸாம் எனும் சொல்லுக்கு அழிவு என்று பொருள்.
மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்.
(இந்த 25:77 வது வசனத்தில் ‘லிஸாமன்’ எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும் போது) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ‘(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று: புகை; இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, ரோமர்கள் (வெற்றி கொள்ளப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெறுவது); நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும்’ என்று கூறினார்கள்.
Book : 65
(புகாரி: 4767)بَابُ {فَسَوْفَ يَكُونُ لِزَامًا} [الفرقان: 77] أَيْ هَلَكَةً
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ
خَمْسٌ قَدْ مَضَيْنَ: الدُّخَانُ، وَالقَمَرُ، وَالرُّومُ، وَالبَطْشَةُ، وَاللِّزَامُ “: {فَسَوْفَ يَكُونُ لِزَامًا} [الفرقان: 77]
சமீப விமர்சனங்கள்