தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4807

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்.

நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்’ என்று தொடங்கி, ‘(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும் பின்பற்றுங்கள்…’ என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு, ‘எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தோ அத்தகையவர்களில் தாவூத்(அலை) அவர்களும் ஒருவராவார். எனவே, (நபி தாவூத்(அலை) அவர்களைப் பின்பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்யவேண்டும்) என்று பதிலளித்தார்கள்.

(திருக்குர்ஆன் 38:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உஜாப்’ எனும் சொல்லுக்கு ‘வியப்புக்குரியது’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கித்து’ எனும் சொல்லுக்கு (பொதுவாக) ‘ஏடு’ என்று பொருள். ஆனால், இங்கு ‘நற்செயல்களின் பதிவேடு’ என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸ்ஸத்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டவர்கள்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மில்லத்துல் ஆம்ரா’ (வேறு சமுதாயம்) எனும் சொல், குறையுயர் சமுதாயத்தைக் குறிக்கிறது.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இக்திலாக்’ எனும் சொல்லுக்குப் ‘பொய்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்பாப்’ எனும் சொல், வானத்தின் வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுன்த்’ (படையினர்) எனும் சொல் குறையுயரைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலாயிகல் அஹ்ஸாப்’ (அந்தக் கூட்டத்தினர்) என்பது முந்தைய தலைமுறையினரைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 38:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபவாக்’ (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு ‘(உலகின் பால்) திரும்புதல்’ என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்த கஃத்னாஹும் சிக்ரிய்யா’ (நாம் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா? என்பதன் கருத்தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம் அறிந்திருந்தோமா?

(திருக்குர்ஆன் 38:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்ராப்’ எனும் சொல்லுக்கு ‘வயதொத்தவர்கள்’ என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்அய்த்’ எனும் சொல்லுக்கு ‘வணக்க வழிபாட்டில் செயலாற்றல்’ என்றும், ‘அல் அப்ஸார்’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை’ என்றும் பொருள்.

Book :65

(புகாரி: 4807)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنِ العَوَّامِ، قَالَ

سَأَلْتُ مُجَاهِدًا، عَنْ سَجْدَةٍ فِي ص، فَقَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ: مِنْ أَيْنَ سَجَدْتَ؟ فَقَالَ: أَوَمَا تَقْرَأُ: {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ}. {أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} [الأنعام: 90] «فَكَانَ دَاوُدُ مِمَّنْ أُمِرَ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْتَدِيَ بِهِ، فَسَجَدَهَا دَاوُدُ عَلَيْهِ السَّلاَمُ، فَسَجَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» {عُجَابٌ} [ص: 5]: ” عَجِيبٌ. القِطُّ: الصَّحِيفَةُ هُوَ هَا هُنَا صَحِيفَةُ الحِسَابِ ” وَقَالَ مُجَاهِدٌ: {فِي عِزَّةٍ} [ص: 2]: «مُعَازِّينَ»، {المِلَّةِ الآخِرَةِ} [ص: 7]: ” مِلَّةُ قُرَيْشٍ، الاِخْتِلاَقُ: الكَذِبُ “، {الأَسْبَابُ} [البقرة: 166]: «طُرُقُ السَّمَاءِ فِي أَبْوَابِهَا»، قَوْلُهُ: {جُنْدٌ مَا هُنَالِكَ مَهْزُومٌ} [ص: 11]: «يَعْنِي قُرَيْشًا»، {أُولَئِكَ الأَحْزَابُ} [ص: 13]: «القُرُونُ المَاضِيَةُ»، {فَوَاقٍ} [ص: 15]: «رُجُوعٍ»، {قِطَّنَا} [ص: 16]: «عَذَابَنَا» (اتَّخَذْنَاهُمْ سُخْرِيًّا): «أَحَطْنَا بِهِمْ»، {أَتْرَابٌ} [ص: 52]: «أَمْثَالٌ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {الأَيْدُ} [ص: 17]: «القُوَّةُ فِي العِبَادَةِ»، {الأَبْصَارُ} [ص: 45]: «البَصَرُ فِي أَمْرِ اللَّهِ»، {حُبَّ الخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّي} [ص: 32]: «مِنْ ذِكْرِ»، {طَفِقَ مَسْحًا}: «يَمْسَحُ أَعْرَافَ الخَيْلِ وَعَرَاقِيبَهَا»، {الأَصْفَادِ} [إبراهيم: 49]: «الوَثَاقِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.