தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4818

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 ஒருவன் தன் பெற்றோரிடம் சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா?எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் மண்ணறையிலிருந்து எழுந்து வரவில்லையே!) என்று கூறுகிறான். பெற்றோர் இருவரும் (மகனுக்காக) அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாக, உனக்குக் கேடுதான்! நம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது என்று கூறகின்றார்கள். ஆனால், அவனோ இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை என்று கூறுகின்றான் (எனும் 46:17ஆவது இறைவசனம்).

 தாவூஸ் இப்னு கைஸான் அல்யமானீ(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், ‘உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர’ எனும் (திருக்குர்ஆன் 42:23 வது) வசனத் தொடர் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்), ‘(இந்த வசனத்திலுள்ள) ‘உறவினர்கள்’ என்பது ‘முஹம்மத்(ஸல்) அவர்களின் உறவினர்களை (பனூ ஹாயுமை)க் குறிக்கும்’ என்று கூறினார்கள். உடனே, இப்னு அப்பாஸ்(ரலி), ‘அவசரப்பட்டுவிட்டீர்; குறைஷிக் குலத்தின் எல்லாக் கிளையினருக்கும் நபி(ஸல்) அவர்களுடன் உறவு முறை இருக்கத்தான் செய்தது’ என்று கூறிவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள், (குறைஷியரின் அனைத்துக் கிளையினரையும் நோக்கி) குறைந்தபட்சம் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள உறவு முறையைப் பேணி (நல்ல முறையில்) நடந்து கொள்வேண்டுமென்றே பெரிதும் விரும்புகிறேன் என்று கூறினார்கள்’ என விளக்கமளித்தார்கள்.

Book : 65

(புகாரி: 4818)

سُورَةُ حم عسق

وَيُذْكَرُ عَنْ ابْنِ عَبَّاسٍ، {عَقِيمًا} [الشورى: 50]: «الَّتِي لاَ تَلِدُ» {رُوحًا مِنْ أَمْرِنَا} [الشورى: 52]: «القُرْآنُ» وَقَالَ مُجَاهِدٌ: {يَذْرَؤُكُمْ فِيهِ} [الشورى: 11]: «نَسْلٌ بَعْدَ نَسْلٍ»، {لاَ حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ} [الشورى: 15]: «لاَ خُصُومَةَ بَيْنَنَا وَبَيْنَكُمْ»، {مِنْ طَرْفٍ خَفِيٍّ} [الشورى: 45]: «ذَلِيلٍ» وَقَالَ غَيْرُهُ: {فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلَى ظَهْرِهِ} [الشورى: 33]: «يَتَحَرَّكْنَ وَلاَ يَجْرِينَ فِي البَحْرِ»، {شَرَعُوا} [الشورى: 21]: «ابْتَدَعُوا»

بَابُ قَوْلِهِ: {إِلَّا المَوَدَّةَ فِي القُرْبَى} [الشورى: 23]

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ مَيْسَرَةَ، قَالَ: سَمِعْتُ طَاوُسًا، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّهُ سُئِلَ عَنْ قَوْلِهِ: {إِلَّا المَوَدَّةَ فِي القُرْبَى} [الشورى: 23]- فَقَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ: قُرْبَى آلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَقَالَ ابْنُ عَبَّاسٍ: عَجِلْتَ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ بَطْنٌ مِنْ قُرَيْشٍ، إِلَّا كَانَ لَهُ فِيهِمْ قَرَابَةٌ، فَقَالَ: «إِلَّا أَنْ تَصِلُوا مَا بَيْنِي وَبَيْنَكُمْ مِنَ القَرَابَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.