தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4846

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 49:2 வது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர் ‘அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தம் தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தம் வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம், ‘உங்களுக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டதற்கு ஸாபித்(ரலி), ‘(என்னுடைய நிலை) மோசம் தான். நான் நபி(ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரகவாசிகளில் ஒருவன்தான்’ என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஸாபித் இப்னு கைஸ் இப்படி இப்படிக் கூறினார்’ என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூஸா இப்னு அனஸ்(ரஹ்) கூறினார்:

அந்த மனிதர் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம், (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஸாபித் இப்னு கைஸ் அவர்களிடம் சென்று ‘நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே’ என்று சொல்!’ என்று கூறினார்கள். 3

Book :65

(புகாரி: 4846)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَزْهَرُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، قَالَ: أَنْبَأَنِي مُوسَى بْنُ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ افْتَقَدَ ثَابِتَ بْنَ قَيْسٍ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا أَعْلَمُ لَكَ عِلْمَهُ، فَأَتَاهُ فَوَجَدَهُ جَالِسًا فِي بَيْتِهِ، مُنَكِّسًا رَأْسَهُ، فَقَالَ لَهُ: مَا شَأْنُكَ؟ فَقَالَ: شَرٌّ، كَانَ يَرْفَعُ صَوْتَهُ فَوْقَ صَوْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ، فَأَتَى الرَّجُلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ أَنَّهُ قَالَ كَذَا وَكَذَا، فَقَالَ مُوسَى: فَرَجَعَ إِلَيْهِ المَرَّةَ الآخِرَةَ بِبِشَارَةٍ عَظِيمَةٍ، فَقَالَ: ” اذْهَبْ إِلَيْهِ فَقُلْ لَهُ: إِنَّكَ لَسْتَ مِنْ أَهْلِ النَّارِ، وَلَكِنَّكَ مِنْ أَهْلِ الجَنَّةِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.