தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4861

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 மேலும், மூன்றாவதான மனாத் (எனும் விக்ரகத்தைப்) பற்றியும் (நீங்கள் சிந்தித்ததுண்டா? எனும்53:20ஆவது இறைவசனம்.)

 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் (‘ஹஜ்ஜில் ஸஃபா மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 02:158 வது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன?’ என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘முஷல்லல் எனும் குன்றில் இருந்து ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில், சுற்றி வராமலிருந்தார்கள். அப்போதுதான் ‘நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (எனும் இரண்டு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்…’ எனும் (திருக்குர்ஆன் 02:158 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றி வந்தனர்’ என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) ‘குதைத்’ எனும் இடத்தில் ‘முஷல்லல்’ எனும் குன்றிலிருந்த சிலையாகும்’ என்று கூறினர்கள். ஆயிஷா(ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், ‘இந்த (திருக்குர்ஆன் 02:158 வது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும், ‘ஃகஸ்ஸான்’ குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் ‘மனாத்’ சிலைக்காக, இஹ்ராம் கட்டி வந்தனர்’ என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.

ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயிருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டி வந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் இறைத்தூதர் அவர்களே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றிவராமலிருந்தோம்… என்று கூறினார்’ எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.

Book : 65

(புகாரி: 4861)

بَابُ {وَمَنَاةَ الثَّالِثَةَ الأُخْرَى} [النجم: 20]

حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، سَمِعْتُ عُرْوَةَ، قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَتْ

إِنَّمَا كَانَ مَنْ أَهَلَّ بِمَنَاةَ الطَّاغِيَةِ الَّتِي بِالْمُشَلَّلِ، لاَ يَطُوفُونَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {إِنَّ الصَّفَا وَالمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ} [البقرة: 158] فَطَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمُسْلِمُونَ ” قَالَ سُفْيَانُ: «مَنَاةُ بِالْمُشَلَّلِ مِنْ قُدَيْدٍ» وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ عُرْوَةُ: قَالَتْ عَائِشَةُ: «نَزَلَتْ فِي الأَنْصَارِ، كَانُوا هُمْ وَغَسَّانُ قَبْلَ أَنْ يُسْلِمُوا يُهِلُّونَ لِمَنَاةَ مِثْلَهُ» وَقَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، كَانَ رِجَالٌ مِنَ الأَنْصَارِ مِمَّنْ كَانَ يُهِلُّ لِمَنَاةَ – وَمَنَاةُ صَنَمٌ بَيْنَ مَكَّةَ وَالمَدِينَةِ – قَالُوا: «يَا نَبِيَّ اللَّهِ كُنَّا لاَ نَطُوفُ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ تَعْظِيمًا لِمَنَاةَ نَحْوَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.