தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4869

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 எவர் (அவர்களால்) அவமரியாதை செய்யப்பட்டுவந்தாரோ அவருக்குப் பிரதிபலனாக நம் கண்முன்னே அது (-மரக்கலம்-) மிதந்து சென்று கொண்டிருந்தது. அதனை நாம் (எதிர் காலத்திற்கு) ஒரு சான்றாக விட்டுவைத்தோம். (இதன் மூலம்) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:14, 15 ஆகிய இறை வசனங்கள்.) நூஹ் (அலை) அவர்களது மரக்கலத்தை அல்லாஹ் அப்படியே விட்டுவைத்தான். அதனை இந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் கண்டனர் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.5

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃபஹ்ல் மின்(ம்) முத்தம்ர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தம்ர்’ என்றோ, ‘முஸ்ஸம்ர்’ என்றோ ஓதவில்லை.)

Book : 65

(புகாரி: 4869)

بَابُ {تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِمَنْ كَانَ كُفِرَ وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]

قَالَ قَتَادَةُ: «أَبْقَى اللَّهُ سَفِينَةَ نُوحٍ حَتَّى أَدْرَكَهَا أَوَائِلُ هَذِهِ الأُمَّةِ»

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ: ” {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.