பாடம் : 3 (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே,நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:17, 22, 32, 40 ஆகிய வசனங்கள்.) இந்த வசனத்தின் மூலத்திலுள்ள யஸ்ஸர்னா எனும் சொல்லுக்கு இந்தக் குர்ஆனை ஓதுவதை நாம் எளிதாக்கியுள் ளோம் என்று பொருள் என முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
(குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃஹல் மின்(ம்) முத்தம்ர்’ (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தம்ர்’ என்றோ, ‘முஸ்ஸம்ர்’ என்றோ ஓதவில்லை.
Book : 65
(புகாரி: 4870)بَابُ {وَلَقَدْ يَسَّرْنَا القُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 17]
قَالَ مُجَاهِدٌ: ” يَسَّرْنَا: هَوَّنَّا قِرَاءَتَهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهُ كَانَ يَقْرَأُ: ” {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]
சமீப விமர்சனங்கள்