பாடம் : 4 வேரோடு வீழ்ந்த பேரீச்சமரங்களின் அடிப்பாகங்களைப் போல் (அக்காற்று) மனிதர்களைப் பிடுங்கி எறிந்து விட்டது. (பார்த்தீர்களா?) நான் அனுப்பிய வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (எனும்54:20,21 ஆகிய வசனங்கள்).
அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார்
ஒருவர் அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்களிடம் (54 வது) அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின் (ம்) முத்தம்ர்’ என்று ஓத வேண்டுமா? அல்லது ‘முஃதக்கிர்’ என்று ஓத வேண்டுமா? என்று கேட்டதற்குவர்கள், ‘ஃபஹல் மின் முத்தம்ர்’ என்றே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதக் கேட்டேன். மேலும், ‘நபி(ஸல்) அவர்கள், ‘ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்’ என ‘தால்’ (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை கேட்டேன் என அப்துல்லாஹ் கூறினார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 65
(புகாரி: 4871)بَابُ {أَعْجَازُ نَخْلٍ مُنْقَعِرٍ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ} [القمر: 21]
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ
أَنَّهُ سَمِعَ رَجُلًا، سَأَلَ الأَسْوَدَ: {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15] أَوْ (مُذَّكِرٍ)؟ فَقَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَقْرَؤُهَا: {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15] قَالَ: وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَؤُهَا: «فَهَلْ مِنْ مُدَّكِرٍ» دَالًا
சமீப விமர்சனங்கள்