பாடம் : 8 தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:46 ஆவது) இறைவசனம். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அமர்ரு (மிகவும் கசப்பானது) எனும் சொல், மாராரத் (கசப்பு) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
யூஸுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார்
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், ‘நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு, ‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்’ எனும் (திருக்குர்ஆன் 54:46 வது) இறைவசனம் அருளப்பெறற்து’ என்று கூறினார்கள்.
Book : 65
(புகாரி: 4876)بَابُ قَوْلِهِ: {بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ} [القمر: 46]
يَعْنِي مِنَ المَرَارَةِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ أَخْبَرَهُمْ، قَالَ: أَخْبَرَنِي يُوسُفُ بْنُ مَاهَكٍ، قَالَ: إِنِّي عِنْدَ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، قَالَتْ
لَقَدْ أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ، {بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ} [القمر: 46]
சமீப விமர்சனங்கள்