பாடம் : 2 கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகை களி)ல் தங்கவைக்கப்பெற்ற ஹூர் எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த வசனத்திலுள்ள) ஹூர் எனும் சொல்லுக்குக் கன்னங்கரு விழியாள் என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மக்ஸூராத் எனும் சொல்லுக்குத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்களுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டும் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.
Book : 65
(புகாரி: 4879)بَابُ {حُورٌ مَقْصُورَاتٌ فِي الخِيَامِ} [الرحمن: 72]
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” الحُورُ: السُّودُ الحَدَقِ ” وَقَالَ مُجَاهِدٌ: ” مَقْصُورَاتٌ: مَحْبُوسَاتٌ، قُصِرَ طَرْفُهُنَّ وَأَنْفُسُهُنَّ عَلَى أَزْوَاجِهِنَّ، {قَاصِرَاتٌ} [الصافات: 48]: لاَ يَبْغِينَ غَيْرَ أَزْوَاجِهِنَّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنِي عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الجَوْنِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِنَّ فِي الجَنَّةِ خَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ، عَرْضُهَا سِتُّونَ مِيلًا، فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ مَا يَرَوْنَ الآخَرِينَ، يَطُوفُ عَلَيْهِمُ المُؤْمِنُونَ، وَجَنَّتَانِ مِنْ فِضَّةٍ، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَجَنَّتَانِ مِنْ كَذَا، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ القَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءُ الكِبْرِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ»
சமீப விமர்சனங்கள்