பாடம் : 5 மேலும், (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர் களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் பூமியில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும் என்று தொடங்கும் 59:9ஆவது இறைவசனம்).
அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்
(‘அபூ லுஃலுஆ ஃபைரோஸ்’ என்பவனால் கத்தியால் குத்தப்பட்ட பிறகு) உமர்(ரலி), ‘(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து (அவர்களின் கண்ணியத்தைக் காத்துக்) கொள்ளவேண்டும் என்று (எனக்குப் பின்னர் வரவிருக்கும்) ‘கலீஃபா’வுக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், நபி(ஸல்) அவர்கள் (மற்றும் நபித்தோழர்கள்) ‘ஹிஜ்ரத்’ செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு இறைநம்பிக்கையை (உறுதியாகப்) பற்றிக் கொண்ட அன்சாரிகளில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரின் நன்மையை) ஏற்று, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்திட வேண்டும் என்று நான் அந்த கலீஃபாவுக்கு உபதேசம் செய்கிறேன்’ என்றார்கள்.7
Book : 65
(புகாரி: 4888)بَابُ {وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ}
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ يَعْنِي ابْنَ عَيَّاشٍ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ
أُوصِي الخَلِيفَةَ بِالْمُهَاجِرِينَ الأَوَّلِينَ: أَنْ يَعْرِفَ لَهُمْ حَقَّهُمْ، وَأُوصِي الخَلِيفَةَ بِالأَنْصَارِ الَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالإِيمَانَ، مِنْ قَبْلِ أَنْ يُهَاجِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْ يَقْبَلَ مِنْ مُحْسِنِهِمْ، وَيَعْفُوَ عَنْ مُسِيئِهِمْ
சமீப விமர்சனங்கள்