தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4914

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். (ஆனால்,)அதை அந்தத் துணைவி (மற்றொரு துணைவிக்கு) தெரிவித்து விடவே, நபிக்கு அல்லாஹ் அதை வெளிப்படுத்தினான். அப்போது, நபி அதில் சிலவற்றை (அந்தத் துணைவியிடம்) சொல்லிக்காட்டிவிட்டு சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார். இவ்வாறு (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் துணைவியிடம் தெரிவித்த போது தங்களுக்கு இதனைத் தெரிவித்தது யார்? என்று அந்தத் துணைவி கேட்டார். அதற்கு நபி அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான்என்று பதிலளித்தார் (எனும் 66:3ஆவது இறைவசனம்). இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து, ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்கள்.6

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நான் உமர்(ரலி) அவர்களிடம் (ஒரு வசனம் குறித்து) கேட்க நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, (வாய்ப்புக் கிடைத்தபோது அவர்களிடம்) ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இறைத்தூதர்(ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)களின் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல்பட்ட இரண்டு துணைவியர் யார்?’ என்று கேட்டேன். என் பேச்சை நான் முடிப்பதற்குள் ‘ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம்’ என்று உமர்(ரலி) பதிலளித்தார்கள். 7

Book : 65

(புகாரி: 4914)

بَابُ {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا، فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ، فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ: مَنْ أَنْبَأَكَ هَذَا؟ قَالَ: نَبَّأَنِيَ العَلِيمُ الخَبِيرُ}

فِيهِ عَائِشَةُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ عُبَيْدَ بْنَ حُنَيْنٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ

أَرَدْتُ أَنْ أَسْأَلَ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، مَنِ المَرْأَتَانِ اللَّتَانِ تَظَاهَرَتَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَمَا أَتْمَمْتُ كَلاَمِي حَتَّى قَالَ: «عَائِشَةُ، وَحَفْصَةُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.