பாடம்: 73.
‘அல்முஸ்ஸம்மில்’ அத்தியாயம்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (73:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபத்தல்’ எனும் சொல்லுக்கு ‘கலப்பற்ற முறையில் அவனுக்காகவென்றே ஆகிவிடுங்கள்’ என்று பொருள்.
ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (73:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்கால்’ எனும் சொல்லுக்கு ‘(கை)விலங்குகள்’ என்பது பொருள். (73:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முன்ஃபதிருன் பிஹி’ எனும் சொல்லுக்கு ‘அதன் பளுவால் தகர்ந்துவிடும்’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (73:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸீபம் மஹீலா’ எனும் சொல்லுக்கு ‘சிதறிய மணற்குவியலாய்’ என்று பொருள். (73:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வபீலா’ எனும் சொல்லுக்கு ‘கடுமையாக’ என்பது பொருள்.
பாடம்: 74. ‘அல்முத்தஸ்ஸிர்’ அத்தியாயம்.
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (74:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அசீர்’ எனும் சொல்லுக்கு ‘மிகக் கடுமையான’ என்பது பொருள். (74:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸ்வரா’ எனும் சொல்லுக்கு ‘மனிதர்களின் கூச்சல், கூக்குரல்கள்’ என்பது பொருள்.
சிங்கத்திற்கும், ஒவ்வொரு கடினமான பொருளுக்கும் ‘கஸ்வரா’ என்றும், ‘கஸ்வர்’ என்றும் பெயர் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(74:50ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தன்ஃபிரா’ எனும் சொல்லுக்கு ‘மிரண்டு வெருண்டோடுகின்ற’ என்பது பொருள்.
பாடம்: 1
யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் முதன்முதலாக அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார், ‘‘போர்த்தியிருப்பவரே!” (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம்என்றார்கள். நான், ‘‘(நபியே!) படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுக!” (இக்ரஉ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள்? என்றேன்.
அதற்கு அபூசலமா அவர்கள், ‘‘நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போலவே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப் பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காணவில்லை. எனக்கு முன்னால் பார்த்தேன். அங்கும் நான் எதையும் காணவில்லை. எனக்குப் பின்னால் பார்த்தேன். அங்கும் நான் எதையும் காணவில்லை. ஆகவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை நான் கண்டேன்.
ஆகவே, நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை என்மீது ஊற்றுங்கள்!” என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும்விட்டார்கள்; என்மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள்.
அப்போது, ‘‘போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! மேலும், உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக!” எனும் (74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன.3
அத்தியாயம்: 65
(புகாரி: 4922)سُورَةُ المُزَّمِّلِ
وَقَالَ مُجَاهِدٌ: {وَتَبَتَّلْ} [المزمل: 8]: «أَخْلِصْ» وَقَالَ الحَسَنُ: {أَنْكَالًا} [المزمل: 12]: «قُيُودًا»، {مُنْفَطِرٌ بِهِ} [المزمل: 18]: «مُثْقَلَةٌ بِهِ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {كَثِيبًا مَهِيلًا} [المزمل: 14]: «الرَّمْلُ السَّائِلُ وَبِيلًا شَدِيدًا»
سُورَةُ المُدَّثِّرِ
قَالَ ابْنُ عَبَّاسٍ: {عَسِيرٌ} [المدثر: 9]: «شَدِيدٌ»، {قَسْوَرَةٌ} [المدثر: 51]: «رِكْزُ النَّاسِ وَأَصْوَاتُهُمْ، وَكُلُّ شَدِيدٍ قَسْوَرَةٌ» وَقَالَ أَبُو هُرَيْرَةَ: القَسْوَرَةُ: ” قَسْوَرٌ الأَسَدُ، الرِّكْزُ: الصَّوْتُ “، {مُسْتَنْفِرَةٌ} [المدثر: 50]: «نَافِرَةٌ مَذْعُورَةٌ»
حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عَلِيِّ بْنِ المُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ
سَأَلْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَوَّلِ مَا نَزَلَ مِنَ القُرْآنِ، قَالَ: {يَا أَيُّهَا المُدَّثِّرُ} [المدثر: 1] قُلْتُ: يَقُولُونَ: {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ} [العلق: 1] فَقَالَ أَبُو سَلَمَةَ: سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ ذَلِكَ، وَقُلْتُ لَهُ مِثْلَ الَّذِي قُلْتَ: فَقَالَ جَابِرٌ: لاَ أُحَدِّثُكَ إِلَّا مَا حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” جَاوَرْتُ بِحِرَاءٍ، فَلَمَّا قَضَيْتُ جِوَارِي هَبَطْتُ فَنُودِيتُ، فَنَظَرْتُ عَنْ يَمِينِي فَلَمْ أَرَ شَيْئًا، وَنَظَرْتُ عَنْ شِمَالِي فَلَمْ أَرَ شَيْئًا، وَنَظَرْتُ أَمَامِي فَلَمْ أَرَ شَيْئًا، وَنَظَرْتُ خَلْفِي فَلَمْ أَرَ شَيْئًا، فَرَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ شَيْئًا، فَأَتَيْتُ خَدِيجَةَ فَقُلْتُ: دَثِّرُونِي وَصُبُّوا عَلَيَّ مَاءً بَارِدًا، قَالَ: فَدَثَّرُونِي وَصَبُّوا عَلَيَّ مَاءً بَارِدًا، قَالَ: فَنَزَلَتْ: {يَا أَيُّهَا المُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ} [المدثر: 2]
Bukhari-Tamil-4922.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-4922.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்