பாடம்: 78.
‘அந்நபஉ’ அத்தியாயம்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(அல்குர்ஆன்: 78:27) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்ஜூன ஹிஸாபா’ (அவர்கள் விசாரணையை நம்பக்கூடியவர்களாக இருக்கவில்லை) என்பதன் கருத்தாவது: அதைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருக்கவில்லை.
(அல்குர்ஆன்: 78:37) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யம்லிகூன மின்ஹு கிதாபா’ (அவனிடம் பேச அவர்களுக்கு அதிகாரம் கிடையாது) என்பதன் கருத்தாவது: இறைவன் அனுமதித்தாலன்றி அவனிடம் அவர்கள் பேச முடியாது.
(அல்குர்ஆன்: 78:38) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸவாப்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியத்தைப் பேசி அதன் வழி நடத்தல்’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (அல்குர்ஆன்: 78:13) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஹ்ஹாஜ்’ எனும் சொல்லுக்கு ‘ஒளிர்கின்ற’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (அல்குர்ஆன்: 78:25) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகஸ்ஸாக்’ எனும் சொல்லுக்கு, ‘வழிகின்ற (சீழ்)’ என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) ‘ஃகஸகத் அய்னுஹு’ எனும் வாக்கியத்திற்கு ‘அவனது கண்ணிலிருந்து (பீளை) வழிந்தது’ என்பது பொருள்.
‘யஃக்ஸிகுல் ஜுர்ஹு’ என்பதற்கு ‘காயத்திலிருந்து (சீழ்) வழிகின்றது’ என்பது பொருள்.
(அல்குர்ஆன்: 78:36) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அத்தாஅன் ஹிஸாபா’ எனும் சொல்லுக்கு ‘போதிய வெகுமதி’ என்று பொருள். ‘அஃதானீ மா அஹ்ஸபனீ’ எனும் வாக்கியத்திற்கு (வழக்கில்) ‘போதிய அளவுக்கு எனக்கு வழங்கினான்’ என்று பொருள்.
பாடம்: 1
‘ஸூர்’ எனும் எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக (கிளம்பி) வருவீர்கள் (எனும் அல்குர்ஆன்: 78:18 ஆவது இறைவசனம்)
இதன் மூலத்திலுள்ள ‘அஃப்வாஜ்’ எனும் சொல்லுக்கு ‘கூட்டங்கள்’ என்பது பொருள்.
அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்டக் காலம்) நாற்பது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்கள்,) ‘‘(அபூஹுரைரா அவர்களே!) நாட்களில் நாற்பதா?” என்று கேட்டனர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(நான் அறியாததற்குப் பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள். (நண்பர்களான) அவர்கள், ‘‘நாற்பது மாதங்களா?” என்று கேட்டனர். அதற்கும் ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘வருடங்கள் நாற்பதா?” என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நான் விலகிக்கொள்கிறேன்” என்று சொன்னார்கள்.
பின்னர், ‘‘வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிப்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பைத் தவிர!
அதுதான் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்” என்று மேலும் சொன்னார்கள்.
அத்தியாயம்: 65
(புகாரி: 4935)سُورَةُ عَمَّ يَتَسَاءَلُونَ
قَالَ مُجَاهِدٌ: {لاَ يَرْجُونَ حِسَابًا} [النبأ: 27]: «لاَ يَخَافُونَهُ»، {لاَ يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا} [النبأ: 37]: «لاَ يُكَلِّمُونَهُ إِلَّا أَنْ يَأْذَنَ لَهُمْ»، {صَوَابًا} [النبأ: 38]: «حَقًّا فِي الدُّنْيَا وَعَمِلَ بِهِ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {وَهَّاجًا} [النبأ: 13]: «مُضِيئًا» وَقَالَ غَيْرُهُ: {غَسَّاقًا} [النبأ: 25]: ” غَسَقَتْ عَيْنُهُ، وَيَغْسِقُ الجُرْحُ: يَسِيلُ، كَأَنَّ الغَسَاقَ وَالغَسِيقَ وَاحِدٌ {عَطَاءً حِسَابًا} [النبأ: 36]: جَزَاءً كَافِيًا أَعْطَانِي مَا أَحْسَبَنِي أَيْ كَفَانِي
بَابُ {يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا} [النبأ: 18]: زُمَرًا
حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالَ: أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: «ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ البَقْلُ، لَيْسَ مِنَ الإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى، إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ، وَمِنْهُ يُرَكَّبُ الخَلْقُ يَوْمَ القِيَامَةِ»
Bukhari-Tamil-4935.
Bukhari-TamilMisc-4935.
Bukhari-Shamila-4935.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்