பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்
நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு ‘ஹிஜ்ரத்’ செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் ‘முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், ‘இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம்.
அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பிறகு, அம்மார்(ரலி), பிலால்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) வந்தார்கள். அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள(து வருகைய)ால், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், ‘இதோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்’ என்று கூறி (மகிழலாயி)னர். நான், ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா’ எனும் (87 வது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருகை தரவில்லை.2
Book :65
(புகாரி: 4941)سُورَةُ البُرُوجِ
وَقَالَ مُجَاهِدٌ: {الأُخْدُودِ} [البروج: 4]: «شَقٌّ فِي الأَرْضِ»، {فَتَنُوا} [النحل: 110]: «عَذَّبُوا»
سُورَةُ الطَّارِقِ
وَقَالَ مُجَاهِدٌ: {ذَاتِ الرَّجْعِ} [الطارق: 11]: «سَحَابٌ يَرْجِعُ بِالْمَطَرِ»، {ذَاتِ الصَّدْعِ} [الطارق: 12]: «تَتَصَدَّعُ بِالنَّبَاتِ»
سُورَةُ سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ البَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
أَوَّلُ مَنْ قَدِمَ عَلَيْنَا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَابْنُ أُمِّ مَكْتُومٍ فَجَعَلاَ يُقْرِئَانِنَا القُرْآنَ، ثُمَّ جَاءَ عَمَّارٌ، وَبِلاَلٌ، وَسَعْدٌ ثُمَّ جَاءَ عُمَرُ بْنُ الخَطَّابِ فِي عِشْرِينَ ثُمَّ ” جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْتُ أَهْلَ المَدِينَةِ فَرِحُوا بِشَيْءٍ، فَرَحَهُمْ بِهِ حَتَّى رَأَيْتُ الوَلاَئِدَ وَالصِّبْيَانَ، يَقُولُونَ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ جَاءَ فَمَا جَاءَ، حَتَّى قَرَأْتُ: {سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى} [الأعلى: 1] فِي سُوَرٍ مِثْلِهَا
சமீப விமர்சனங்கள்