தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4946

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 மேலும், நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்எனும் (92:6,7) இறை வசனங்கள். . . . ..அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம் என்று தொடங்கி, மேற்கண்ட (4945ஆவது) ஹதீஸைக் கூறினார்கள். பாடம் : 5 அவருக்கு, இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகைசெய்வோம் (எனும் 92:7ஆவது இறைவசனம்).

 அலீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், ‘தம் இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (இதன்மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள். பிறகு, ‘(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்’ எனும் (திருக்குர்ஆன் 95:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

Book : 65

(புகாரி: 4946)

بَابُ {فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى} [الليل: 7]

حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

أَنَّهُ كَانَ فِي جَنَازَةٍ، فَأَخَذَ عُودًا يَنْكُتُ فِي الأَرْضِ، فَقَالَ: «مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ كُتِبَ مَقْعَدُهُ مِنَ النَّارِ، أَوْ مِنَ الجَنَّةِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَفَلاَ نَتَّكِلُ؟ قَالَ: ” اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ {فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالحُسْنَى} [الليل: 6] ” الآيَةَ، قَالَ شُعْبَةُ: وَحَدَّثَنِي بِهِ مَنْصُورٌ فَلَمْ أُنْكِرْهُ مِنْ حَدِيثِ سُلَيْمَانَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.