தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4960

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

 அனஸ் (ரலி) அறிவித்தார்

நபி (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், ‘உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’ என்று கூறினார்கள். உபை (ரலி), ‘அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா இப்னு திஆமா (ரஹ்), ‘உபை இப்னு கஅப் (ரலி) அவர்களுக்கு ‘லம் யகுனில்லஃதீன கஃபரூ’ எனும் (98 வது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது’ என்றார்கள்.

Book : 65

(புகாரி: 4960)

حَدَّثَنَا حَسَّانُ بْنُ حَسَّانَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيٍّ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ القُرْآنَ» قَالَ أُبَيٌّ: آللَّهُ سَمَّانِي لَكَ؟ قَالَ: «اللَّهُ سَمَّاكَ لِي» فَجَعَلَ أُبَيٌّ يَبْكِي،

قَالَ قَتَادَةُ: فَأُنْبِئْتُ أَنَّهُ قَرَأَ عَلَيْهِ: {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الكِتَابِ} [البينة: 1]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.