பாடம் : 3
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம், ‘உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்’ என்று கூறினார்கள். உபை (ரலி), ‘என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?’ என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை (ரலி), ‘அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட்டேனா?’ என்று (மீண்டும்) கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று கூறினார்கள். இதைக்கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன.
Book : 65
(புகாரி: 4961)حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ المُنَادِي، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أُقْرِئَكَ القُرْآنَ» قَالَ: آللَّهُ سَمَّانِي لَكَ؟ قَالَ: «نَعَمْ» قَالَ: وَقَدْ ذُكِرْتُ عِنْدَ رَبِّ العَالَمِينَ؟ قَالَ: «نَعَمْ» فَذَرَفَتْ عَيْنَاهُ
சமீப விமர்சனங்கள்