ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார்
(திருக்குர்ஆன் 108:1 வது வசனத்தில் இடம் அப்பாஸ் (ரலி) கூறுகையில், ‘அது, நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்’ எனத் தெரிவித்தார்கள்.
(அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூ பிஷ்ர் (ரஹ்) கூறினார்:
நான் ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘மக்கள் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்’ என்று கூறினார்கள்.
Book :65
(புகாரி: 4966)حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ قَالَ
فِي الكَوْثَرِ: هُوَ الخَيْرُ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ “، قَالَ أَبُو بِشْرٍ: قُلْتُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ: فَإِنَّ النَّاسَ يَزْعُمُونَ أَنَّهُ نَهَرٌ فِي الجَنَّةِ، فَقَالَ سَعِيدٌ: النَّهَرُ الَّذِي فِي الجَنَّةِ مِنَ الخَيْرِ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ
சமீப விமர்சனங்கள்