பாடம் : 4
அவனுடன் அவன் மனைவியும் (அழியட்டும்!) அவளோ விறகு சுமப்பவள் (எனும் 111:4 ஆவது இறைவசனம்).
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஹம் மாலத்தல் ஹதப் எனும் சொல்லுக்குப் புறம் பேசித் திரிகின்றவள்(முஸ்லிம்களுக்கும் இணை வைப்பாளர்களுக்குமிடையே பகைமையை வளர்ப்பவள்) என்று பொருள்.
(111:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மசத் எனும் சொல், பனைமர நாருக்குச் சொல்லப்படும். இதுவே (மறுமையில்) நரகத்தின் சங்கிலியைக் குறிக்கும்…
பாடம் : 1
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல.) ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக்கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.2
Book : 65
(புகாரி: 4974)بَابُ قَوْلِهِ: (وَامْرَأَتُهُ حَمَّالَةُ الحَطَبِ)
وَقَالَ مُجَاهِدٌ: حَمَّالَةُ الحَطَبِ: «تَمْشِي بِالنَّمِيمَةِ»، {فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ} [المسد: 5]: ” يُقَالُ: مِنْ مَسَدٍ: لِيفِ المُقْلِ، وَهِيَ السِّلْسِلَةُ الَّتِي فِي النَّارِ
سُورَةُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
يُقَالُ: لاَ يُنَوَّنُ {أَحَدٌ} [البقرة: 102]: أَيْ وَاحِدٌ
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، حَدَّثَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
قَالَ اللَّهُ: كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَقَوْلُهُ: لَنْ يُعِيدَنِي، كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الخَلْقِ بِأَهْوَنَ عَلَيَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ فَقَوْلُهُ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا وَأَنَا الأَحَدُ الصَّمَدُ، لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ، وَلَمْ يَكُنْ لِي كُفْئًا أَحَدٌ
சமீப விமர்சனங்கள்