தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4975

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

அல்லாஹ் (எவரிடத்திலும்) எத்தேவையுமில்லாதவன் எனும் (112:2ஆவது) இறைவசனம்.

அரபுகள் தங்களுடைய பிரமுகர்களை அஸ்ஸமத் என்று அழைக்கின்றனர். அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எவரிடம் தலைமைப் பதவி போய்முடிகிறதோ அத்தகைய (உயர் மட்டத்) தலைவரே அஸ்ஸமத் எனப்படுவார்.

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும.

ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (அல்லாஹ் கூறினான்:) ‘அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (எனவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளுமில்லை) தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை’ (திருக்குர்ஆன் 112:3,4)

 

(திருக்குர்ஆன் 112:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃப்வ்’ எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் (‘நிகரானவன்’ என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

Book : 65

(புகாரி: 4975)

بَابُ قَوْلِهِ: {اللَّهُ الصَّمَدُ} [الإخلاص: 2]

وَالعَرَبُ تُسَمِّي أَشْرَافَهَا الصَّمَدَ» قَالَ أَبُو وَائِلٍ: «هُوَ السَّيِّدُ الَّذِي انْتَهَى سُودَدُهُ»

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: وَحَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ اللَّهُ: كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، أَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: إِنِّي لَنْ أُعِيدَهُ كَمَا بَدَأْتُهُ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَأَنَا الصَّمَدُ الَّذِي لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ، وَلَمْ يَكُنْ لِي كُفُؤًا أَحَدٌ «(لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُؤًا أَحَدٌ)»

كُفُؤًا وَكَفِيئًا وَكِفَاءً وَاحِدٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.